கே. மோரூர் சூ.மாணிக்கம் மறைவு: கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

1 Min Read

கே.மேரூர், மே 9- சேலம் மாவட்டம், கே. மோரூரை பிறப்பிட மாகக் கொண்ட தமிழாசிரியர் பெரியார் பெருந்தொண்டர் சூ.மாணிக்கம் (வயது 77) உடல் நலக்குறைவால் 7-5-2026 அன்று மறைவுற்றார். அவரது இல்லத்தில் உடல் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

அரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன் தலைமையில், மாநிலக் கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, மாவட்ட செயலாளர் கு. தங்கராஜ், மாவட்ட பகுத்தறிவாளர்கழக துணை செயலாளர், மூ. சிவகுமார், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் பொன்.அய்யனார், கடத்தூர் ஒன்றிய செயலாளர் பச் சையப்பன், கடத்தூர் நகர தலைவர் நெடுமிடல், விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ.நடராஜன், பகுத் தறிவாளர் கழக ஒன்றிய தலைவர் சொ.பாண்டியன் வேப்பிலைப்பட்டி திமுக நிர்வாகிகள் அ.தமிழரசன், மூ.கணேசன், தீ.அமுல்செல்வம் மற்றும் சி.ஆசைதம்பி, க.மணி, கழக இளைஞரணித் தோழர் சிரிகுரு, பார்த்தசாரதி, விடுதலைவாசகர் வட்ட முன்னாள் தலைவர் கோ.தன சேகரன் மற்றும் பலர் அவரது உடலுக்கு மாலை வைத்து வீர வணக்கம் முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர்

தருமபுரி மாவட்டத்தில் வேப்பிலைப்பட்டி, தாளநத்தம், சிந்தலப்பாடி, குருபரல்லி ஊர்களில் பணியாற்றிய காலத்தில் (1970-1980) தந்தை பெரியாரின் கொள்கை ஏற்று பள்ளிக்கு கருப்பு சட்டையுடன் வருவதுடன், கையில் விடுதலை, பெரியார் புத்தகங்கள் இல்லாமல் இருக்க மாட்டார். தான் பணியாற்றிய இடங்களில் மாணவர்களிடம் பகுத்தறிவு கருத்துக்களை விதைத்ததுடன், மாணவர்களின் கட்டுப்பாடான ஒழுக்க நெறியை வளர்த்தவர். பணியாற்றிய 50 ஆண்டுகள் கடந்தும் அவரை கிராம மக்கள் இன்றும் நினைவில் வைத்துள்ளார்கள். என்பதற்கு அவருடைய பகுத்தறிவு பணியே காரணம். அவர் சொந்த ஊரான கே. மோரூரில் தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கர் படிப்பகம் ஏற்படுத்தி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான நூல்களை வழங்கி நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *