இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு ‘தேசிய கீதத்துக்கு’ இணையான அந்தஸ்து! ஒன்றிய அமைச்சரவை ஒப்புதலாம்!

2 Min Read

புதுடில்லி, மே 7 இந்திய நாட்டின் தேசியப் பாடலான, ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு, தேசிய கீதமான, ‘ஜன கண மன’விற்கு இணையான அந்தஸ்து வழங்கும் முன்மொழிவுக்கு, ஒன்றிய அமைச்சரவை ஒப்பு தல் அளித்து உள்ளது.
மேற்கு வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 1875 நவ., 7 இல், ‘வந்தே மாதரம்’ பாடலை இயற்றினார் என்று சொல்லப்படுகிறது. பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு, தேசிய கீதமாக அல்லா மல், நாட்டின் தேசிய பாடலாக, 1950 ஜன., 24 இல் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது.
இந்தப் பாடல் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சில மாதங்களுக்கு முன், நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதமும் நடந்தது.
இதன் மதச் சார்புத் தன்மை, இஸ்லாமிய வெறுப்பு காரணமாகக் கடும் விமர்சனங்களுக்கும், ஆட்சபேணைகளுக்கும் உள்ளானது.
இதன் தொடர்ச்சியாக, அரசு மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னதாக, வந்தே மாதரம் பாடல் கட்டாயம் இசைக்க வேண்டும் என, கடந்த பிப்ரவரியில் ஒன்றிய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நேற்று முன்தினம் (5.5.2026) நடந்த ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில், வந்தே மாதரம் பாடலுக்குத் தேசிய கீதத்துக்கு இணையான அந்தஸ்து வழங்கும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய கீதத்தைப் பாதுகாக்கும் அதே சட்டத்தின் கீழ், வந்தே மாதரம் பாடலையும் கொண்டு வர, தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜூலை – ஆகஸ்டில் நடக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இந்த திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, இனி மேல் வந்தே மாதரம் பாடப்படும் போது அதற்கு அவமதிப்பு செய்தாலோ அல்லது இடையூறு விளைவித்தாலோ அது பிணையில் வெளி வர முடியாத குற்றமாகக் கருதப்படும். அவமதிப்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மீண்டும் அதே குற்றத்தை செய்வோருக்கு குறைந்தபட்சம் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்க இந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *