கென்யாவில் கனமழை, நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு

நைரோபி, மே 4- கென்யாவின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
கென்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் அமைந்துள்ள தாராகா நிதி, எல்கேயோ-மராக் வெட் மற்றும் கியாம்பு ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு உறு திப்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியான நிலச்சரிவு கள் பல குடும்பங்களை பாதித்துள்ள துடன், ஏராளமானோர் தங் களது வீடுகளை இழந்து இடம் பெயர்ந்துள்ளனர். மேலும், பொதுக் கட்டமைப்பு வசதிகளும் சொத்துகளும் பெருமளவில் சேத மடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எத்தனை பேர் ஒட்டுமொத்தமாக இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறித்த துல்லியமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
கென்யாவின் தலைநகரான நைரோபியில் சாலைகள் அனைத் தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் காட்சிகள் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், மழையினால் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், இது தங்களது வணிகத்தைப் பாதிப்பதாகவும் கூறி மாகோங்கனி மற்றும் ருவாய் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கனமழையினால் நீர் மூலம் பரவும் நோய்கள் ஏற்பட வாய்ப் புள்ளதாகவும், நாடு முழுவதும் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள் சேதமடையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மய்யம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. கென்யாவில் கடந்த மார்ச் மாதத்தில் பெய்த மழையின்போது ஏற்பட்ட வெள்ளத்தில் 37 பேர் உயிரிழந்த நிலையில், தற்போதைய பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களுக்குள் நடைபெறும் இரண்டாவது பெரிய இயற்கைச் சீற்றமாகும்.
வழக்கமாக மார்ச் முதல் மே மாதம் வரை பெய்யும் இந்த பருவகால மழை, மே மாதத்தின் முதல் பாதியில் உச்சத்தை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதத் தலையீடுகளால் ஏற்படும் காலநிலை மாற்றமே கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இத்தகைய தீவிர வானிலை மாற்றங்களுக்குக் காரணம் என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *