சுயமரியாதைக் கட்சி – அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை; பணம் கேட்பதில்லை; உத்தியோகம் கேட்பதில்லை; பதவி கேட்பதில்லை; பட்டம் கேட்பதில்லை; அது மாத்திரமல்லாமல் அதில் சேர்ந்தவர்கள் எல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும். செல்வாக்கையும் இக் கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள். உண்மைதானே! அப்படியானால் நல்ல இலட்சியங்களைச் சொல்லி ஜனங்களை ஏமாற்றித் தங்கள் வசம் செய்து சுயலாபம் அடைகின்ற கட்சிகளில் – சுயமரியாதைக் கட்சியைச் சேர்க்க முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
