நேற்று (29.04.2026), தலைமைத் தேர்தல் அதிகாரி / அரசு முதன்மைச் செயலாளர் அர்ச்சனா பட்நாயக் 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணும் செயல்முறை குறித்த பயிற்சியில் கலந்து கொண்டு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள்(Returning Officers), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்(Assistant Returning Officers), மாவட்ட கணினி நிரலாளர்கள்(District Programmers) மற்றும் உதவி கணினி நிரலாளர்கள்(Assistant Programmers) ஆகியோர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வில், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி /அரசு சிறப்புச் செயலாளர் அ. சிவஞானம், இணை தலைமைத் தேர்தல் அதிகாரி / அரசு துணைச் செயலாளர் சுருதஞ்ஜெய் நாராயணன், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி / அரசு கூடுதல் செயலாளர்
வே. சிறீதர், இணை தலைமைத் தேர்தல் அதிகாரி ஆர். மேனுவல்ராஜ், மற்றும் பாண்டிச்சேரி முதன்மைப் பயிற்சியாளர் ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

