புதுடில்லி, ஏப்.29 ஈரானின் சபஹார் துறை முகத் திட்டத்தின் மீது இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருந்த தடைகளிலிருந்து விலக்கு அளிக்கும் காலக்கெடு வை, கடந்த 26.4.2026 அன்று அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஈரானின் சபஹார் துறைமுக விவகாரம் குறித்து அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தற்போதைய போர்ச் சூழல் இந்தப் பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாக்கி யுள்ளதாக இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா- ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் நாங்கள் ஆலோசித்து வரு கிறோம். ஆனால், தற்போது நிலவும் போர் மற்றும் மோதல் போக்கு நிச்சயமாக ஒரு சிக்கலான காரணியாக மாறியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கியப் பாதை
சபஹார் துறைமுகத்தின் ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தை மேம்படுத்தும் திட்டம் இந்தியாவின் பல ஆண்டுகால முயற்சியாகும். 2003 ஆம் ஆண்டு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது. ஆனால், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்க அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் இத்திட்டம் தாமதமானது. தொடர்ந்து இந்தத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்றாலும், ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையிலிருந்து காபூலை இணைக்கும் ‘ஸரஞ்ச்-டெலாராம்’ நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்ந்தன. பின் 2015 ஆம் ஆண்டு ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வர்த்தகத்தை மேம்படுத்தியது. பாகிஸ்தானுடனான உறவு விரிசலடைந்த நிலையில், ஆப்கானிஸ்தான் வழியாக ஈரான் செல்ல இந்தியாவுக்கு இது ஒரு முக்கியப் பாதையாக மாறியது.
ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்துள்ள தாலும், டிரம்ப் அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியதாலும் இந்தத் துறைமுகத்தை இயக்குவதில் இந்தியாவிற்கு தொடர்ந்து நெருக்கடிகள் உருவாகி வருகின்றன. குறிப்பாக மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் பலவீனமான நிர்வாகத்தால் இந்த நெருக்கடி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2018 இல் இத்துறைமுகத்தை இயக்க இந்தியாவிற்கு அமெரிக்கா விலக்கை அளித்தது.
2025 செப்டம்பர் மாதம் டிரம்ப் நிர்வாகம் அந்த விலக்கை ரத்து செய்துவிட்டது. பின் னர் இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு ஏப்ரல் வரை தற்காலிக விலக்கு நீட்டிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த விலக்கு முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்கா மிரட்டல்
டிரம்ப் நிர்வாகம் இந்த மாத இறுதிக்குள் அந்த துறைமுகத்தில் “பணிகளை முடித்துக் கொள்ள” வேண்டும் என இந்திய அரசுக்கு காலக்கெடு விதித்து மிரட்டல் விடுத்துள்ளது.
டிரம்ப்பின் மிரட்டல் காரணமாக தற்போது துறைமுகத்தில் இருந்து தற்காலிகமாக முதலீடு களைத் திரும்பப் பெறுவது குறித்து இந்தியா ஆலோசித்து வருகிறது. இத்துறைமுகத்தை ரயில் பாதையுடன் இணைக்கும் திட்டங்கள் இருப்பதால், இந்தியா முழுமையாக வெளி யேற விரும்பவில்லை என கூறப்படுகிறது. இத்துறைமுகப் பணிகளை மேற்கொள்வ தற்காக இந்தியாவுக்கு மீண்டும் காலம் நீட்டிக்கப் படாவிட்டால், அமெரிக்கத் தடை களை ஏற்றுக்கொண்டு, தனது 620 மில்லியன் டாலர் முதலீட்டை இந் தியா கைவிட வேண்டிய நிலை உரு வாகலாம் , அல்லது திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து, அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடை களை எதிர்கொள்ள வேண் டிய நிலை வரலாம்.
இது இரண்டு மட்டுமே தற்போது இந்தியா முன் உள்ள வாய்ப்புகள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
சொந்த வெளியுறவுக்கொள்கைக்கு அமெரிக்காவிடம் அனுமதி வாங்கும் அவல நிலைக்கு இந்தியாவை பா.ஜ.க. தள்ளி விட்டது என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
