கொலம்பியா பேருந்தில் குண்டுவெடிப்பு! 13 பேர் பலி!

1 Min Read

கஜிபியோ, ஏப்.27- கொலம்பியாவில் பேருந்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 13 போ் உயிரிழந்தனா். மேலும் 38 போ் காயமடைந்தனா்.
கஜிபியோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் மறைத்து வைக் கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.
இதில் அந்த பேருந்து துண்டு துண்டாக உடைந்தது. பேருந்தில் இருந்த 13 போ் உடல் சிதறி உயிரிழந்தனா். 5 சிறுவா்கள் உள்பட 38 போ் பலத்த காயமடைந்தனா். இந்தத் தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அதேநேரத்தில் குண்டு வெடிப்பு நடந்த பகுதி, போதைப்பொருள் கடத்தும் கும்பலின் செல்வாக்கு அதிகமுள்ள பகுதியாகும். மேலும், கொலம்பிய அரசால் தேடப்படும் கடத்தல் கும்பல் தலைவன் இவான் மொரடிஸ்கோ தலைமையில் செயல்படும் தீவிரவாத குழுவினா் நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதியாகும். இதனால் குண்டுவெடிப்பை அவா்களில் யாரேனும் நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ கமாண்டா் ஹகோ லோபெஸ் கூறுகையில், இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்றாா்.
குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கொலம்பிய அதிபா் குஸ்டாவோ பெட்ரோ, தாக்குதலை நடத்தியவா்கள் தீவிரவாதிகள், பாசிசவாதிகள், போதை மருந்து கடத்தல் காரா்கள் என்று குற் றஞ்சாட்டியுள்ளாா். கொலம் பியாவில் கடந்த 2 நாள்களில் நடைபெற்ற 26-ஆவது தாக்குதல் சம்பவம் இது என்றும், இதனால் அப்பாவி மக்களே பாதிக்கப்பட்டு உள்ளனா் என்றும் அவா் விமா்சித்துள்ளாா்.

கொலம்பிய பாதுகாப்பு அமைச்சா் பெட்ரோ சான்ஸேஸ், குண்டுவெடிப்பை நிகழ்த்தியோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க போவதாக அறிவித்துள்ளாா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *