தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (மாவட்டத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு இம்மாதத்துக்கான ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். நன்றி.
– – – – –
திராவிடர் கழக காப்பாளர் சுயமரியாதைச் சுடரொளி மு.துக்காராம் 5 ஆம் நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு குடும்பத்தினர் ரூ1000 வழங்கினர். என்றும் நீங்கா நினைவுகளுடன் கல்யாணி துக்காராம் மற்றும் மகன்கள், மகள்கள், மருமகன், மருமகள்,பேரன், பேத்திகள்.
மும்பை பெரியார் பாலா, தமிழர் தலைவரை சந்தித்து ரூ.10,000 கழக வளர்ச்சி நிதியாக வழங்கினார்.

மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசனின் தந்தையார் பூ.பெரியசாமி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் (20/04/2026) திருச்சி அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ:1000 வழங்கப்படுகிறது .

பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி மானமிகு கருஞ்சட்டைகாரர் தி.இரா.இரத்தினசாமி பிறந்த நாளையொட்டி (20.04.2026) திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.2500 மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2500 நன்கொடை வழங்கப்பட்டது.

