அசாம் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பு குறைபாடு எதிர்க்கட்சித் தலைவர் பகீர் புகார்!

1 Min Read

கவுகாத்தி, ஏப்.19 அசாமில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Rooms) போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியா பரபரப்பு புகாரை எழுப்பியுள்ளார். இரட்டை நுழைவாயில்கள்: தேர்தல் ஆணைய விதிமுறைப்படி பாதுகாப்பு அறைக்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால், இந்தத் தொகுதிகளில் இரண்டு கதவுகள் கொண்ட அறைகளில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. பூட்டப்படாத கதவுகள்: ஒரு கதவு மட்டுமே பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு கதவு உட்புறமாகத் தாழிடப்பட்ட நிலையில், முறையான பாதுகாப்பு இன்றி அப்படியே விடப்பட்டுள்ளது. தமது புகாரை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்பட ஆதாரங்களையும் கடிதத்துடன் அவர் இணைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக, வாக்கு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் அசாம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *