மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) காலியாக உள்ள பல்லாயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலிப்பணியிடங்கள்: 9,195பதவியின் பெயர்: காவலர் (Constable – Technical & Tradesmen)
கல்வி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 21 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். (அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு).தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்:கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு (Computer Based Test).உடற்தகுதித் தேர்வு (Physical Efficiency Test).உடல் அளவீட்டுத் தேர்வு (Physical Standard Test).
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://rect.crpf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மே 19.
காலதாமதத்தைத் தவிர்க்க தகுதியுள்ள இளைஞர்கள் உடனே விண்ணப்பித்து ஒன்றிய அரசுப் பணியில் சேரும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

