தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் கேட்கவே கேட்காது! ப.சிதம்பரம் எம்.பி.,

1 Min Read

ஈரோடு, ஏப். 15- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதி அமைச் சரான ப.சிதம்பரம் எம்.பி., ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சூரம் பட்டியில் நேற்று (14.4.2026) பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் கேட்காது!

தமிழ்நாடு, மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் 16-ந் தேதி (நாளை) நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட இருக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினும் இந்த அரசியல் சாசன திருத்தத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்கள். எனவே இந்த மசோதாவை தோற்கடிப்போம்.

நாடாளுமன்ற தொகுதி மறுவரை யறை செய்வதால் நமது 40 தொகுதிகள் 60 ஆக உயரும் என்கிறார்கள். ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் போது தொகுதிகள் குறையும். தென் மாநிலங்களின் துணை இன்றி வடக்கே சில மாநிலங்களில் வெற்றி பெற்றாலே பா.ஜனதா ஆட்சி அமைக்க முடியும். தமிழ்நாட்டின் குரல் நாடாளுமன்றத்தில் கேட்கவே கேட்காது. எனவேதான் காங்கிரஸ், தி.மு.க. இதை எதிர்க்கிறது.

தற்போது தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2025-2026 நிதி ஆண்டில் வளர்ச்சி குறித்து மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் நிதி ஆயோக் ஒரு அறிக்கை அளித்துள்ளது. வளர்ச்சியில் இந்திய அளவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. இதுபோல் மக்கள் நலத்திட்டங்கள் வழங்கியதிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.

இவ்வாறு முதல் இடத்தில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மீண்டும் இந்த திட்டங்களில் உள்ள உதவித்தொகைகளை அதிகரித்து தரப்போகிறார். இல்லத்தரசிகளுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் வழங்க உள்ளார். அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தொடரவும் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்து மீண்டும் மு.க. ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *