சென்னை, மார்ச் 30- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருத்துறைப்பூண்டி, தளி, பவானிசாகர், திருப்பூர் வடக்கு, சிறீவில்லிபுத்தூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
இந்த நிலையில் 5 தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி,
தளி தொகுதியில் டி.ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி தொகுதியில் மாரிமுத்து, திருப்பூர் வடக்கு தொகுதியில் ரவி, பவானிசாகர் தொகுதியில் பிஎல் சுந்தரம், சிறீவில்லிப்புத்தூர் தொகுதியில் மகாலிங்கம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
