தமிழ்நாட்டிற்குள் பாசிசம் வராமல் தடுக்க– தி.மு.க. – 200 இடங்களுக்கு மேல் வெல்லும்! ஆ.இராசா எம்.பி. பேட்டி!

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

பெரம்பலூர், ஏப். 25– தி.மு. கழக துணைப் பொதுச்செய லாளரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான ஆ.இராசா. சொந்த ஊரான, பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் வாக்கு செலுத்திய பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் கடந்த அய்ந்தாண்டுகளில் தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ள எண்ணற்ற அரசு திட்டங்களை கருத்தில் கொண்டும், முதலமைச்சர் முத்துவேல்கருணாநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வந்துள்ள வளர்ச்த்திட்டங்களை பாராட்டும் விதத்திலும் அதுமட்டுமின்றி பாசிச சக்திகளை தமிழ்நாட்டிற்குள் விடாமல் தடுக்க மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை யில் பெருவாரியான மக்கள் மிகுந்த எழுச்சியுடன் இன்று வாக்களித்து வருகின்றனர், எனது சொந்தக் கிராமத்திலும் அந்த எழுச்சியை காணமுடிகிறது.

கண்டிப்பாக பெரம்பலூரில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் 200 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும்,

தமிழ்நாட்டில் இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு 2026 சட்டமன்ற தேர்தலில் வெளிமாநில முதலமைச்சர்கள் மற்றும் வடமாநில பா.ஜ.க. அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள் என ஏராளமான பாசிச சக்திகள் தமிழ்நாட்டில் கூடாரம் அமைத்தும், கொட்டமடித்து கொண்டும் பிரச்சாரம் செய்து தமிழ்நாட்டை எப்படியாவது பிடித்து விடலாம் என்று நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் எண்ணம் பலிக்காது, அவர்களை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஓட,ஓட விரட்டி விட்டார்கள் என்பதை உறுதிபடுத்துவதற்கான செய்தி இந்தத் தேர்தலில் தெரிகிறது என்றார்.

.பி.யில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையில் பலி!

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு

லக்னோ, ஏப். 25– பாஜக ஆளும் உத்தரப்பிர தேசத்தில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், சிறப்பு புலனாய்வுக்குழு விசா ரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கடந்த மாதம் 4 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் உரிய சிகிச்சை கிடைக்கா மல் உயிரிழந்தார். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. காசியாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கடந்தவாரம் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்க மளித்தனர். அதன்பிறகும், விசாரணைகள் சரியாக நடக்கவில்லை என்றும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முரண்பாடான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரபிரதேச மாநில காவல்துறை தலைமை இயக்குநருக்கு உச்சநீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

பெண் காவல்துறை தலைவர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. அனைத்து விசாரணை அதிகாரிகளும், பெண் அதிகாரிகளாக இருக்க வேண்டும் என்றும் விசாரணையை இரண்டு வாரங்களில் முடித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றவாளிகளைக் காப்பாற்ற முரண்பாடான ஆவணங்கள் தயாரிப்பு என மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தவேண்டும்  என பாதிக்கப்பட்ட வர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *