காணொலியைக் காட்டி காட்டி மூன்று ஆண்டுகளாக பாலியல் உறவு! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த இளம்பெண் காட் சாமியார் மீது பரபரப்பு புகார்

2 Min Read

நாசிக், மார்ச் 29- மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தை சேர்ந்த அசோக் காரத் என்பவர் தன்னை ஒரு ஆன்மிகவாதி என அடையாளப்படுத்தி கொண்டவர். மேலும் இவர் முன்னாள் வணிக கப்பல் போக்குவரத்து துறை அதிகாரியாக பணியாற்றியதால் “கேப்டன் காரத்” என்று அழைக்கப் பட்டு வந்தார்.

அசோக் காரத் புனேயை சேர்ந்த 35 வயது பெண்ணிடம் தன்னை சிவபெருமானின் அவதாரம் என்றும், அந்த பெண் பார்வதி தேவி என்றும் கூறி ஆசைவார்த்தை கூறி உள்ளார். இந்த பிரபஞ்சம் முழுவதும் நான் சொல்வதை கேட்கும் என கூறி மயக்கி வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு அசோக்குடன் முதலில் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.

அதே ஆண்டு டிசம்பர் மாதம், அந்த பெண்ணை சந்திக்க அசோக் காரத் புனே வந்துள்ளார். அங்குள்ள ஒரு விடுதியில் அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதை ரகசியமாக படமெடுத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த வீடியோவை காட்டி..காட்டி.. கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து அவரை காணொலியைக் கொடுமை செய்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம், அவர் வசாயில் உள்ள ஒரு விடுதிக்கு அந்த பெண்ணை வரவழைத்து, மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் காட் சாமியாரின் இச்சைகளை தாங்காமல் பொறுத்தது போதும் என பொங்கி எழ முடிவு செய்தார் அந்தப் பெண். அதனை தொடர்ந்து அந்த பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். குற்றம் முதலில் புனேவில் நடந்ததால் மணிக்பூர் காவல்துறையினர் 25.3.2026 அன்று ‘ஜீரோ எஃப்.அய்.ஆர்’ பதிவு செய்து, மேல் விசாரணைக்காக புனேவில் உள்ள ஹடப்சர் காவல் நிலையத்திற்கு விசாரணையை மாற்றினர்.

மணிக்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஹிராலால் ஜாதவ் இது குறித்து தெரிவிக்கையில், குற்றவாளியை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத் தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். விரைவில் காட் சாமியார் பிடிபடு வார் என காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்ந்து காட் சாமியாரால் பாதிக்கப்பட்ட பல பெண்களும் புகார் கொடுக்க முன்வந்துள்ளனர். சாமியாரின் ஆசிரமத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஆபாச காணொலிகளை காவல்துறையினர் பறிமுதல் செய் துள்ளனர். மேலும் பல ஆவணங்கள், கோப்புகள், ஒரு டைரி மற்றும் தாள் களையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மராட்டியத்தில் காட் சாமியார் குறித்த லீலைகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *