புதுடில்லி, மார்ச் 26-– ஒன்றிய பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு முழுமையான மாநிலத் தகுதி (அந்தஸ்து), ஒன்றிய அரசின் ‘செல்வமகள்’ சேமிப்புத் திட்ட வட்டியை 9.1 சதவீதமாக உயர்த்துதல், நலிவடைந்து வரும் வங்கதேசத்துடன் ஆன இருதரப்பு உறவு, நிதி உதவிகளில் மேம்பாடு உள்ளிட்ட மூன்று கேள்விகளை தி.மு.க மக்களவைக்குத் தலைவரும் சிறீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு எழுப்பி இருந்தார். இந்தக் கேள்விகள் அனைத்தும் 24.03.2026 அன்று பதிலளிப்புக்கு வந்தன.
ஒன்றிய உள்துறை, வெளி யுறவுத் துறை மற்றும் நிதித்துறை களின் அமைச்சர்கள் இந்த வினாக்களுக்கு பதில் அளித்தனர்.
எழுத்துப்பூர்வமாக மூன்று அமைச்சர்களும் அளித்த பதில் களின் விவரங்கள் பின்வருமாறு :-
புதுச்சேரிக்கு
முழுமாநிலத் தகுதி!
ஒன்றியப் பகுதியாக இருந்து வரும் புதுச்சேரிக்கு முழு மாநிலத் தகுதி வழங்கப்பட வேண்டும் என்ற அப்பகுதிவாழ் மக்களின் கோரிக்கையை ஒன்றிய அரசு ஏற்று அதனைநிறைவேற்ற உள்ளதா? அப்படியானால் அதன் விவரம் என்ன? கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது என்றால் அதற்கான காரணம் என்ன? என டி.ஆர்.பாலு தனது வினாவில் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், தற்சமயம் அரசியலமைப்பு சட்டம் 239 (A)இன் கீழ் புதுச்சேரி சட்டமன்றத்துடன் கூடிய ஒன்றியப் பகுதியாக, துணைநிலை மாநிலமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதனை திறம்பட நிர்வகிக்கவும் பொதுநன்மையை வழங்கிடவும் தேவையான நிர்வாக அமைப்பு, ஆட்சித்திறன் ஆகியவற்றை தற்போதைய அரசிய லமைப்பு மற்றும் சட்டம் சார்ந்த கட்ட மைப்பினை தற்போதைய துணை மாநில நிலையே அளிக்கிறது, என தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
இதன்மூலமாக புதுச்சேரிக்கு முழு அளவிலான மாநிலத் தகுதியும் அதிகாரங்களும் அவசியம் இல்லை தற்போதைய துணை மாநிலத் தகுதியே போதுமானதாக உள்ளது என ஒன்றிய அரசு நாடாளுமன்ற த்தில் ஒளிவுமறைவு இல்லாமல் தெரிவித்துள்ளதைத்தான் உள்துறை அமைச்சரின் பதிலில் இருந்து தெளிவாகிறது.
குறைக்கப்பட்ட ‘செல்வமகள்’ சேமிப்பு திட்ட வட்டிவிகிதம் ஆரம்ப அளவுக்கு(9.1%) உயர்த்தப்படுமா?
‘சுகன்யா சம்ரித்தி யோஜனா’ என்ற பெயரில் பத்து வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் நலனை காக்க 2015 முதல் ஒரு திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது.
தொடங்கப்பட்டபோது, இந்த ‘செல்வமகள்’ சேமிப்பு திட்டத்தின் கீழ் வைக்கப் பட்டுள்ள சேமிப்பின்மீது 9.1 சதவீதம் வட்டி வழங்கப் பட்டது. சென்ற பத்தாண்டுகளில் வட்டி வீதம் கடுமையாக குறைக்கப் பட்டு விட்டது. எனவே, பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்யும் நோக்கில் செயல்படுத்தபட்டு வரும் இந்த திட்டத்தில் வட்டிவிகிதம் பழையபடி 9.1 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப் படுமா என்று டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, வட்டி விகிதம் 2024 ஜனவரி முதல் 8.1 விழுக்காடு அளவிலேயே தொடரும் எனத் தெரிவி்த்துள்ளார்.
வங்கதேசத்துக்கான நிதியுதவி, இருநாட்டு உறவில் கடும் பின்னடைவா?
வங்கதேசத்துக்கு இந்திய 2014 முதல் தொடர்ந்து நிதி உதவிகள், இந்திய துறைமுகங்களில் வங்கதேசப் பொருட்கள் இறக்கு மதிக்கு முன்னுரிமை உள்ளிட்ட ஆதரவுக்குப் பிறகும் அண்மையில் வங்கதேசத்துடனான உறவு நலிவடைந்த காரணம் என்ன, இறக்குமதி முன்னுரிமை மீண்டும் கொண்டு வரப்படுமா என்பது உள்ளிட்ட பல்வேறு வினாக்களை டி.ஆர்.பாலு தனது கேள்வியில் எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த வெளி உறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் 2014 முதல் 650 கோடி ரூபாய் அளவுக்கு வங்கதேசத்துக்கு இந்திய அரசு கடன் மற்றும் நிதி உதவி செய்துள்ளது.
இருப்பினும் 2021-2022இல், ரூ.219.53 கோடியாக இருந்த நிதி உதவி 2025-2026இல் ரூ.25.01 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளதை அமைச்சரின் பதிலில் உள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
வங்க தேசத்தில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட் களுக்கு இந்தியாவின் கடல் துறைமுகங்களில் இறக்குமதிக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பான கொள்கை முடிவு சம்பந்தப்பட்ட அனைத்து கூறுகளையும் கருத்தில் கொண்டு இறுதி செய்யப்படும்.
வங்க தேசத்துடனான உறவு அண்டை நாடு என்ற முக்கியத்து வத்தையும் நெடுங்கால ஆழமான வரலாற்று சிறப்பு மிக்க நட்பு, கலாச்சாரம் மற்றும் மொழிப் பிணைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மேலும் பேணி வலுப்படுத்த இந்தியா ஆவன செய்யும் எனவும் அமைச்சர் தன் பதிலில் தெரிவித்தார்.
