நாடு முழுவதும் 100 வயதை கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.49 லட்சம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, மார்ச் 23 மகா ராஷ்டிர மாநிலம் புனே நகரில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தெற்கில் 6,000 கி.மீ. கடற்கரையில் இருந்து இமயமலையில் உள்ள மிக உயரமான சிகரங்கள் வரை வாக் காளர்களை கொண்ட நாடு இந்தியா. கிழக்கு, மேற்கு பகுதிகளில் பாலைவனங்களை கொண்டது. நாட்டில் 100 வயதைக் கடந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2.49 லட்சமாக உள்ளது. தவிர 1.80 லட்சம் வாக்காளர்கள் 80 வயதைக் கடந்தவர்கள். நாட்டில் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நெகி சில நாட்களுக்கு முன்னர் காலமானார். அப்போது அவருடைய வயது 106. இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னர் கூட அவர் அஞ்சல் மூலம் வாக்களித்தார்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் புணேவில் 49.84 சதவீத வாக்குகள் மட்டுமே பதி வாகின. இங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது. கடலோரப் பகுதி, மலைப் பகுதி, பாலைவனப் பகுதி அல்லது யாரும் எளிதில் சென்று வர முடியாத கடினமான பகுதிகளில் வசிப்பவர்கள் கூட தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். ஜன நாயக அமைப்பை அவர்கள் வலுப்படுத்தும் ஆர்வத் துடன் வாக்களிக்கும் போது, நகர்ப்புறங்களில் உள்ள சிலர் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.

நகர்ப்புறத்தில் உள்ள அனை வரும் தேர்தலில் வாக்களித்து நாட்டை வலிமைப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். 18 வயது நிரம்பிய இளைய தலைமுறையினர் ஆர்வமுடன், உற்சாகத்துடன் வாக்களிக்க முன்வர வேண்டும். உங்கள் வாக்குகளால் மட்டுமே பாரம்பரிய ஜனநாயகம் வலிமை பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *