வாசிங்டன், மார்ச் 22- இனிமேல் வெளி நாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது மற்றும் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தால் புதுப்பிக்கமுடியாது என்ற புதிய சட்டமான டெலிலாவிற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித் துள்ளார் இதன் மூலம் அமெரிக்காவில் வணிக ரீதியிலான டிரக் ஓட்டும் இந்தியர்கள் இனி உரிமத் தைப் பெறவோ அல்லது புதுப்பிக்கவோ முடியாது.
சிறுமி டெலிலாவும் கடும் பாதிப்பு
இந்த விதிமுறை யால் சுமார் 2 லட் சம் ஓட்டுநர்கள் பாதிக்கப் படுவார்கள். இவர்களில் பெரும் பகுதியினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக பஞ்சாப், அரியானா ராஜஸ் தான் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024ஆம் ஆண்டு இந்திய வம்சாவளி டிரக் ஓட்டுநர் ஒருவரால் ஏற்பட்ட விபத்தில் ‘டெலிலா’ என்ற சிறுமி கடுமையாகப் பாதிக் கப்பட்டார். இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது.
இதன் மூலம் இந்தியர்கள் தற்போதுள்ள உரிமம் காலாவதியாகும் போது, அதை மீண்டும் புதுப்பிக்க முடியாது. புதிய கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பிக்க முடியாது
இதனால் பல ஆயிரக் கணக்கான இந்திய இளைஞர்கள் தங்கள் வாழ் வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு
இந்திய ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவது குறித்து இந்திய அரசு கவலை கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு நாட் டின் உள்நாட்டுச் சட்ட திட்டங்களில் (குறிப்பாக ஓட்டுநர் உரிமம் போன்ற விவகாரங்களில்) தலையிடுவது ராஜதந்திர ரீதியாகச் சவாலானது.
பல ஆண்டுகளாக அமெரிக்காவில் டிரக் ஓட்டி வரும் இந்தியக் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து மீண்டும் இந்தியா வரும் சூழல் உருவாகி விட்டது
டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இந்தியர்களுக்கு எதிரான மிகவும் மோச மான முடிவுகளை எடுத்து வருகிறார்.
தனது நண்பர் டிரம்ப் என்று மேடை தோறும்பேசும் மோடி அங்கு வாழும் இந்தியர் களைப் பாதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கூறாமல் இந்தியர்களுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கையை கள்ள மவுனத்தோடு வேடிக்கை பார்க்கிறார் என்று வாழ்வாதரம் இழக்கப் போகும் குடும்பங்கள் பெரிதும் கவலையோடு தெரிவிக்கின்றனர்.
