பாணன்
- இஸ்ரேலும் முன்னெடுத்தது
- லெபனான் மீதான தாக்குதல் – இஸ்ரேலின் தந்திரம்!
- மதவெறியே போருக்கான காரணம்!
- ‘அகண்ட இஸ்ரேல்’ என்பது என்ன?
- ராணுவ நடவடிக்கைகளின் விரிவாக்கம் ஏன்?
- நிரந்தரப் பதற்ற நிலை
- இஸ்ரேலின் தொடரும் குற்றங்கள்
- ஈரானும், அமெரிக்க அரசியல் பகடைக்காய்களும்!
- “அழுகைச் சுவர்”
- மசூதியை இடித்துத் தள்ள வேண்டும்!
- ஷியா தலைமையின் மீதான தாக்குதலும், அதன் விளைவுகளும்!
- ஈரானைப் பொது எதிரியாக்கும் சூழ்ச்சி!
- உலகப் பொருளாதாரம் சிதைந்தாலும் எங்களுக்கென்ன?
- இஸ்ரேலின் மதவெறிப் போர் உலக நாடுகளின் கவனத்தில்…
- அமெரிக்க மக்கள் உணர்வார்களாக!
இந்தியாவில் 1860களுக்குப் பிறகு தீவிர ஹிந்துத்துவ கொள்கை கொண்ட ஸநாதனம்- அதனை மட்டுமே கொண்ட ஒரு நிலப்பகுதி – அதுவே அகண்ட பாரதம் என்ற கொள்கை முன்வைக்கப்பட்டது. அதனையே 1925ஆம் ஆண்டு
ஆர்.எஸ்.எஸ் தனது அமைப்பின் முதுகெலும்புக் கொள்கையாக அமைத்தது

இஸ்ரேலும் முன்னெடுத்தது
அகண்ட பாரதக் கனவின் முதல் அடியை தடுத்துவிட்டாரே என்ற வெறியின் காரணமாகத்தான் காந்தியார் கொலை நடந்தது. இவர்களின் இந்த தீவிர மதவாதக் கொள்கையால் இன்றுவரை இந்தியா பெரும் மதவாதச்சிக்கலில் பழமைவாதக் கோட்பாடு கொண்ட ஆட்சியாளர்களால் சீரழிந்து வருகிறது. இதே திட்டத்தைத்தான் இஸ்ரேலும் முன்னெடுத்து வருகிறது.
எகிப்தின் நைல் நதி முதல் யூப்ரடீஸ் வரையிலான பகுதி இஸ்ரேலுக்கானது என்கின்றனர் அப்படிச் சொல்வதோடு விட்டால் பரவாயில்லை. ஆனால், அவர்களின் அந்த வெறி இன்று உலகின் அனைத்துப் பகுதி மக்களையும் எதாவது ஒரு விதத்தில் கடுமையாக பாதிக்க வைத்துள்ளது
லெபனான் மீதான தாக்குதல் – இஸ்ரேலின் தந்திரம்!
அரபு நாடுகளிடையே பகைமையை ஊட்டி இஸ்ரேல் தனது அகண்ட இஸ்ரேல் என்ற கோட்பாட்டை நோக்கி மிக நிதானமாகவும், அதேசமயம் தீவிரமாகவும் காய்களை நகர்த்தி வருகிறது. உலக ஊடகங்களின் கவனம் ஈரானை நோக்கியிருக்க, இஸ்ரேல் தனது பார்வையை லெபனான் பக்கம் திருப்பியுள்ளது. அங்கு நிலவும் சூழல், காசாவில் நடந்த பேரழிவின் இரண்டாம் பாகமாக உருவெடுத்து வருகிறது.
கோடிக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். பன்னாட்டு அளவில் தடை செய்யப்பட்ட வெள்ளை பாஸ்பரஸ் போன்ற ரசாயன ஆயுதங்கள் பொதுமக்கள் மீது பயன்படுத்தப்படுவதாகக் கடுமையான புகார்கள் எழுந்துள்ளன.
மதவெறியே போருக்கான காரணம்!
இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அணுகுமுறையில் அடிப்படையிலேயே பெரிய வேறுபாடு உள்ளது. இஸ்ரேலுக்கு இது வெறும் போர் அல்ல. இது ஒரு மதப்போர். எண்ணெய் வளமோ அல்லது ஈரானைக் கைப்பற்றுவதோ அவர்களின் முதன்மை நோக்கம் அல்ல. அவர்களின் ஒட்டுமொத்த கவனமும் மதக் கோட்பாடுகளின் அடிப்படையிலான ‘புனிதப் போரை’ நோக்கியே உள்ளது.
இந்தப் போரின் இதயப்பகுதியாக இருப்பது ஜெருசலேம். யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான இந்தப் போரில், அமெரிக்க அரசியல்வாதிகளின் பங்கு முக்கியமானது. குறிப்பாக, லின்ஸி கிரஹாம் போன்ற தலைவர்கள் அமெரிக்காவை விட இஸ்ரேலின் நலனுக்காகவே அதிகம் உழைப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
அமெரிக்காவின் தற்போதைய முக்கியப் பொறுப்புகளில் உள்ள பீட் ஹெக்செத் போன்றவர்களின் கருத்துக்கள் ஆபத்தானவை. அவர் இஸ்லாமியர்களின் ‘புனிதத் தலமான’ அல்-அக்ஸா பள்ளிவாசல் அமைந்துள்ள இடத்தில் மூன்றாவது யூத ஆலயத்தை எழுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாகவே அவரது அணுகுமுறை பார்க்கப்படுகிறது.
டிரம்ப் போன்ற தலைவர்களின் திட்டமிடப்படாத தொலைநோக்குப் பார்வையில்லாத நடவடிக்கை, மதத் தீவிரவாதக் கோட்பாடுகளும் இணைந்து உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன. அண்மையில் அமெரிக்க தூதர் மைக் ஹக்கபீயின் கருத்துக்கள் இந்த விவாதத்தை மீண்டும் உலகரங்கில் முன்னிறுத்தியுள்ளன..

‘அகண்ட இஸ்ரேல்’ என்பது என்ன?
“அகண்ட இஸ்ரேல்” என்பது யூதர்களின் புனித நூலான பைபிளின் ஆதியாகமம் (Book of Genesis) பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வாக்குறுதியை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி, நைல் நதியிலிருந்து யூப்ரடீஸ் நதி வரை உள்ள நிலப்பரப்பு இஸ்ரேலுக்குச் சொந்தமானது எனக் கூறுகிறது.
ராணுவ நடவடிக்கைகளின் விரிவாக்கம் ஏன்?
நவீன இஸ்ரேலின் தந்தை என அழைக்கப்படும் தியோடோர் ஹெர்சல், அகண்ட இஸ்ரேல் கோட்பாட்டை நிலை நிறுத்தும் திட்டம், வெறும் கனவு மட்டுமல்ல அதை அடைந்தே தீருவோம் என்றார்.
கடந்த பல ஆண்டுகளாக பிரதமர் நெதன்யாகுவின் அரசு இதனைச் செயல்படுத்தி வருவதாகப் பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். காசா, லெபனான் மற்றும் மேற்குக் கரையில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகள் இந்த விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகின்றன.
அகண்ட இஸ்ரேலின் துவக்கமாக மூன்றாவது யூத ஆலயத்தைக் கட்ட முயல்வது, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒரு பெரும் மதப்போராக மாறக்கூடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இன்றைய இஸ்ரேல் 1948-இல் பிரிட்டிஷ் “பாலஸ்தீன் மண்டேட்” முடிவுக்கு வந்த பிறகு உருவானது.
1948இல் அரபு – இஸ்ரேல் போருக்குப் பிறகு, இஸ்ரேல் தனது எல்லைகளை விரிவுபடுத்தியது: 1967 – போருக்குப் பிறகு மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. தற்போது பன்னாட்டுச் சட்டங்களுக்குப் புறம்பாக அங்கு யூதக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நிரந்தரப் பதற்ற நிலை
அகண்ட இஸ்ரேல் நோக்கத்தை அடைவதற்கான ஒரு நீண்டகால உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் சில வலதுசாரி அரசியல்வாதிகளின் ஆதரவு, இஸ்ரேலின் இந்த மதரீதியான நில உரிமைக் கோரிக்கைகளுக்கு பன்னாட்டு அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் முயற்சியாக உள்ளது.
1967-ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரில் தொடங்கி, இன்று வரை நீடிக்கும் இஸ்ரேலின் நில விரிவாக்கக் கொள்கைகள், அந்தப் பிராந்தியத்தை ஒரு நிரந்தரப் பதற்ற நிலையிலேயே வைத்திருக்கின்றன.
1967-இல் இஸ்ரேல் அரபுப் படைகளைத் தோற்கடித்தது அந்தப் பிராந்தியத்தின் வரலாற்றையே மாற்றியமைத்தது. அப்போது மேற்குக் கரை, காசா, சினாய் தீபகற்பம் மற்றும் சிரியாவின் கோலான் திட்டுகள் ஆகியவை இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன இது மூன்றும் பழைய ஏற்பாட்டில் இஸ்ரேலியர்களின் முதல் சந்ததிக்குக் கையளிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இஸ்ரேலின் தொடரும் குற்றங்கள்
பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் அய்.நா. சபையின் தீர்மானங்களை இஸ்ரேல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 1982-இல் எகிப்துடன் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி சினாய் தீபகற்பம் திருப்பிக் கொடுக்கப்பட்டாலும், மற்ற நிலப்பகுதிகள் இஸ்ரேலின் பிடியில்தான் உள்ளன.
இஸ்ரேலின் அண்மைக்கால நடவடிக்கைகள், அதன் எல்லைகளை மேலும் விரிவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, சிரியா மற்றும் லெபனான் நிலப்பகுதிகள் மீதான தாக்குதல்கள் அண்டை நாடுகளின் இறையாண்மையை அச்சுறுத்துவதாக உள்ளன. 2026 மார்ச் 12 அன்று நடந்த ஒரு சந்திப்பில், பிரதமர் நெதன்யாகு இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னால் மத ரீதியான காரணங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டது, “அகண்ட இஸ்ரேல்” எனும் கனவை நோக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
ஈரானும், அமெரிக்க அரசியல் பகடைக்காய்களும்!
இந்த விரிவாக்கக் கொள்கைக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது ஈரான் மட்டுமே! இஸ்ரேலால் தனித்து ஈரானை எதிர்கொள்வது கடினம் என்பதால், அமெரிக்காவைத் துணைக்கு அழைக்கும் வியூகத்தை அது கையாண்டு வருகிறது.
ஆக்கிரமிப்புகளுக்கு அப்பால், இஸ்ரேலின் மிக முக்கியமான இலக்காக இருப்பது ஜெருசலேம். யூத நம்பிக்கையின்படி, “அடித்தளக் கல்” அமைந்திருக்கும் கோயில் மலை என்பது உலகம் தொடங்கிய இடமாகக் கருதப்படுகிறது.
இந்த இடம் இஸ்லாமியர்களுக்கும் ‘புனித’மான ஒன்றாக இருப்பதால், அங்கு இஸ்ரேல் மேற்கொள்ளும் எந்தவொரு மாற்றமும் உலகளாவிய அளவில் பெரும் மத மற்றும் அரசியல் மோதல்களுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. அமெரிக்காவின் அதிகாரம் மற்றும் இஸ்ரேலின் மத ரீதியான இலக்குகள் இணைந்து மத்திய கிழக்கை ஒரு முடிவில்லாப் போரை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
“அழுகைச் சுவர்”
அந்த இடத்தில் முதல் யூதக் கோவில் கி.மு. 1000-இல் சாலொமோன் மன்னனால் கட்டப்பட்டது. இது கி.மு. 586-இல் பாபிலோனியர்களால் இடிக்கப்பட்டது.
கி.மு. 515-இல் மீண்டும் கட்டப்பட்ட இந்த ஆலயம், கி.பி. 70-இல் ரோமானியர்களால் அழிக்கப்பட்டது. இதன் எஞ்சிய ஒரு பகுதியே இன்று “மேற்குச் சுவர்” (Western Wall) அல்லது “அழுகைச் சுவர்” என்று அழைக்கப்படுகிறது.
இன்று இரண்டாம் ஆலயம் இருந்த அதே இடத்தில் “மசூதி” அமைந்துள்ளது. இது இஸ்லாமின் மூன்றாவது ‘புனித’ இடமாகக் கருதப்படுகிறது. முகம்மது நபி அவர்கள் இங்கிருந்தே விண்ணுக்குச் சென்றதாக (ஏறியதாக) முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
இந்த மசூதி கி.பி. 691-692 காலப்பகுதியில் உமைய்யத் கலீபா அப்துல்-மாலிக் இப்னு மர்வான் என்பவரால் கட்டப்பட்டது.
யூத மதத்தின் ஒரு பிரிவினர் மற்றும் தீவிர சியோனிசக் குழுக்கள், அதே இடத்தில் “மூன்றாவது ஆலயம்” கட்டப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
மசூதியை இடித்துத் தள்ள வேண்டும்!
தீவிரப் போக்குடைய குழுக்கள் அல்-அக்ஸா மசூதியை இடித்துவிட்டு அங்கே ஆலயத்தை எழுப்ப வேண்டும் என்று கோருகின்றன. இது ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகிற்கும் தங்களின் அடையாளம் மற்றும் மதத்தின் மீதான தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது.
1967-இல் இஸ்ரேல் இந்த இடத்தைக் கைப்பற்றியதிலிருந்து பதற்றம் தணியவில்லை. பன்னாட்டு ஒப்பந்தங்களின்படி இது இஸ்லாமிய அறக்கட்டளையின் (Waqf) நிர்வாகத்தில் இருந்தாலும், இஸ்ரேலிய அரசியல்வாதிகளின் அடிக்கடி வருகை மோதலைத் தூண்டி வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் சமீபத்திய நகர்வுகள் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்புகள், அவர் இந்த மதத் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றும் திசையில் நகர்வதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
ஜெருசலேமின் இந்தப் புனித பூமி, ஒருபுறம் இறை நம்பிக்கையின் சிகரமாக இருந்தாலும், மறுபுறம் புவிசார் அரசியலின் வெடிமருந்து கிடங்காகவே இருந்து வருகிறது. “மூன்றாவது ஆலயம்” என்பது வெறும் கட்டிடக் கனவு அல்ல; அது மத்திய கிழக்கின் அமைதி மற்றும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு பன்னாட்டுப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
ஷியா தலைமையின் மீதான தாக்குதலும்,
அதன் விளைவுகளும்!
அதன் விளைவுகளும்!
ஈரானின் ஆன்மிகத் தலைவர் அயத்துல்லா காமெனி மீதான தாக்குதல், ஷியா முஸ்லிம்களிடையே ஈடு செய்ய முடியாத வடுக்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரமலான் மாதத்தில் இத்தகைய படுகொலைகள் நிகழ்த்தப்படுவது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களிடையே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான வெறுப்பை பல தசாப்தங்களுக்கு நீட்டிக்கச் செய்யும்.
இது ஒரு புதிய வகை ஆயுதப் போராட்டத்திற்கும், பிராந்தியத்தில் ஒருபோதும் முடியாத மோதல்களுக்கும் வித்திடக்கூடும்.
ஈரானைப் பொது எதிரியாக்கும் சூழ்ச்சி!
சவுதி அரேபியா, சைப்ரஸ் போன்ற நாடுகளில் நடத்தப்படும் “பொய்யான தாக்குதல்கள்” (False Flag Operations) மூலம் ஈரானை ஒரு பொது எதிரியாகச் சித்தரிக்க முயற்சி நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
ஈரானை ஒரு தீவிரவாத நாடாகக் காட்டி, அனைத்து மத்திய கிழக்கு நாடுகளையும் அதற்கு எதிராகத் திருப்புவது.
அரபு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே மோதலை உருவாக்கி, அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுப் பலவீனமடைவதை உறுதி செய்தல்.
மற்ற நாடுகள் சிதைந்த பிறகு, இஸ்ரேல் அந்தப் பிராந்தியத்தின் ஒரே அதிகார மய்யமாக உருவெடுப்பதே இதன் இறுதித் திட்டம் என்று அரசியல் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
உலகப் பொருளாதாரம்
சிதைந்தாலும் எங்களுக்கென்ன?
சிதைந்தாலும் எங்களுக்கென்ன?
இந்த மோதலின் முதன்மை நோக்கம் உயிரிழப்புகளை அதிகரிப்பதன் மூலம் ஒரு பிராந்திய அச்சத்தை உருவாக்குவதே என்பது பலரது பார்வையாக உள்ளது. உலகப் பொருளாதாரம் சிதைந்தாலும், அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் இஸ்ரேல் தனது இலக்கை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது.
ஈரானை அமெரிக்காவின் துணையோடு பலவீனப்படுத்தி, அதன் மூலம் அகண்ட இஸ்ரேல் பணியைத் துவக்குவதே இஸ்ரேலின் திட்டம்.
இஸ்ரேலின் மதவெறிப் போர்
உலக நாடுகளின் கவனத்தில்…
உலக நாடுகளின் கவனத்தில்…
வளைகுடா நாடுகளைச் சிதைத்து, துருக்கியைப் போருக்குள் இழுத்து, இறுதியாக மேற்கு ஆசியா மற்றும் வட ஆப்பிரிக்காவை உள்ளடக்கிய ஒரு பரந்த நிலப்பரப்பைக் கைப்பற்றுவதே இத்திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.
யூத ஆதிக்கத்தை நிலைநாட்டி, அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் ஒரு “பொற்காலம்” பிறக்கும் என்று தீவிரமாக நம்புவோர் இப்போரை ஒரு மதக் கடமையாகவே கருதுகின்றனர். பிரதமர் நெதன்யாகுவின் போர் கால உரைகளில் இத்தகைய குறியீடுகள் அவ்வப்போது வெளிப்படுவதை உலக நாடுகள் கவனித்து வருகின்றன.
வரவிருக்கும் இந்தப் பேரழிவைத் தடுப்பது கடினமானது என்றாலும், சாத்தியமற்றது அல்ல. அதற்கான சில முக்கியக் காரணிகள்:
அமெரிக்க மக்கள் உணர்வார்களாக!
அமெரிக்க மக்களின் விழிப்புணர்வு: அமெரிக்க அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அதன் வெளியுறவுக் கொள்கைகள் ஒரு குறிப்பிட்ட நாட்டின் நலனுக்காக எவ்வாறு திசைதிருப்பப்படுகின்றன என்பதையும் அமெரிக்க மக்கள் உணர வேண்டும்.
உலக நாடுகள் வெறும் பார்வையாளர்களாக இல்லாமல், நியாயமான அரசியல் தீர்வை நோக்கிச் செயல்பட வேண்டும்.
மத்திய கிழக்கின் மோதல்கள் ஒரு பிராந்தியத்திற்குள் முடிந்துவிடும் என்று நினைப்பது அறியாமை. இது உலகளாவிய நிலைத்தன்மையை அச்சுறுத்தும் ஒரு மாபெரும் சுழல். விழிப்புணர்வும், நேர்மையான அரசியல் மாற்றங்களும் மட்டுமே இந்தத் தீயை அணைக்க உதவும்.
