இது என்ன கூத்தோ!

1 Min Read

கங்கை ஆற்றில் அசைவு உணவு சாப்பிட்ட
14 வாலிபர்கள் கைதாம். அப்படியானால் அந்த கங்கை ஆற்றில் வாழும் மீன்களை என்ன செய்ய உத்தேசம்? கிழட்டுப் பசுக்களை உயிருடன் கங்கையில் தள்ளி விடுகிறார்களே அதை என்ன செய்யப் போகிறார்கள்? காவிகளின் மதவெறிக்கு கணக்கே இல்லையோ – ஓ – கங்கை ஆற்றில் படகில் மாமிசம் சாப்பிட்டவர்கள் முஸ்லிம்களாயிற்றே!

வழக்கு விசாரணை : தி.மு.க. எம்பி மனு

அதிமுக முன்னாள் அமைச்சர்கள்மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்பி கிரிராஜன் வழக்கு தொடர்ந்து உள்ளார்; வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

அப்படி போடு!

சென்னை பல்லாவரம் உட்பட்ட பகுதியில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமிக்கு 20 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு! சிறுமிக்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு.

5 இடங்கள்

தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *