இந்நாள் – அந்நாள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்த் தொண்டிற்காக சிங்கப்பூர் அரசால் கவுரவிக்கப்பட்ட தமிழவேள் கோ.சாரங்கபாணி நினைவுநாள் (16.3.1974)

‘தமிழவேள்’ கோ.சாரங்கபாணி அவர்கள் தமிழ் ஊடகவிலாளரும், எழுத்தாளரும் மற்றும் வெளியீட்டாளரும் ஆவார். 1935-இல் சிங்கப்பூரில் ‘தமிழ் முரசு’ இதழைத் தொடங்கினார். இது இன்றும் சிங்கப்பூரின் முதன்மையான தமிழ் நாளிதழாகத் திகழ்கிறது. ‘முன்னேற்றம்’, ‘சீர்திருத்தம்’, ‘தி இந்தியன் டெய்லிமெயில்’ ஆகிய ஏடுகளையும் தொடங்கினார்.

சிங்கப்பூரில் தந்தை பெரியாரில் சுயமரியாதை கொள்கைகளைத் ‘தமிழ்முரசு’ இதழில் பரப்பியதோடு மூடநம்பிக்கை ஒழிப்பு மற்றும் முற்போக்குச் சிந்தனைகளை சிங்கைத் தமிழர்கள் உள்ளத்திலும் விதைத்தவர்.

ஆரியப் பண்பாட்டு விழாவை சான்றுகளோடு சுட்டிக்காட்டி ‘தமிழர் திருநாள்’ தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு போன்றவற்றைக் கொண்டாடப் பரப்புரை செய்து அதில் வெற்றி கண்டவர்.

சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலத்தில்  “குடிஅரசு” ஏட்டினை மலாயா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முகவராக இருந்து விற்பனை செய்து பாப்பிடவும். தந்தை பெரியார் அவர்களின் கொள்கை வழிபட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மலாயா மண்ணிலும், சிங்கப்பூரிலும் தோன்றி டவும் மிகவும் கடுமையாக உழைத்தவர் ஆவார்.

இவரது தமிழ்ப் பணியைப் பாராட்டி குன்றக்குடி அடிகளார் இவருக்கு ‘தமிழவேள்’ என்ற பட்டத்தை வழங்கினார். சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக்க அரும்பாடுபட்டவர்களில் முதன்மையானவர்.  கடந்த 2024 மார்ச் 16 அன்று இவரது 50-ஆவது ஆண்டு நினைவு நாள் சிங்கப்பூர் மற்றும் மலேசியத் தமிழர்களால் மிகச் சிறப்பாக  கடைப்பிடிக்கப்பட்டது.

இன்று கோ. சாரங்கபாணி அவர் களின் 52ஆவது நினைவு நாளாகும் (16.3.2026).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *