தஞ்சையில், தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்று ஒலி முழக்கம் எழுப்பினர்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசினைக் கண்டித்து
தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்!

தஞ்சை, மார்ச் 15 – ‘‘தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை; அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை!’’ தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசையும், அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் இன்று (15.3.2026) காலை 10.30 மணிக்கு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது!

ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் இன்று நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டருக்கும் – வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டருக்கும் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

தமிழ்நாடு

உணவகங்கள், வணிக நிறுவனங்கள் சரிவர இயங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
சிறு-குறு தொழில்கள் உள்ள அதிக தொழில்வளமிக்க தமிழ்நாடு இந்த கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்பதால் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை சரிசெய்ய வேண்டும் என முதலமைச்சர் அவர்கள் இந்தியப் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி இருந்தார். ஆனால், தற்போது வரை மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி நிலைமையை சீராக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு. நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி பேசவே பிரதமர் மறுத்து வருவது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாடு

அதோடு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி, நூறு நாள் வேலை திட்ட நிதி, குடிநீர் இணைப்பு நிதி என எந்த நிதியையும் ஒதுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், ஒசூர் விமான நிலையம் என எந்தவொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் அனுமதி தராமல் முட்டுக்கட்டை போட்டு வருவது. மும்மொழி திணிப்பு என்ற பெயரில் தமிழ்மொழியை அழிக்க துடிப்பது, கீழடி அகழ்வாய்வு முடிவுகளை ஏற்க மறுப்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

இப்படி தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசையும், அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து இன்று (15.3.2026) காலை 10.30 மணியளவில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில்…

தஞ்சை மத்திய மாவட்ட, தஞ்சை மாநகர மதசார்பற்ற கூட்டணி சார்பில், காலை 11.30 மணிக்கு, தஞ்சாவூர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒலி முழக்கம் எழுப்பினார்.

தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன், மேனாள் அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் முரசொலி, தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளரும், மேயருமான சண்.இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, காங்கிரஸ் கட்சி மாநகர் மாவட்டத் தலைவர் மகேந்திரன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் முனைவர் தமிழ்ச்செல்வன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் இடிமுரசு இலக்கனன், தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் சிவநேசன், முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஜெயினுல் ஆப்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பாட்ஷா, ம.ஜ.க. மாவட்டச் செயலாளர் வில்வம் ரியாஸ், மக்கள் நீதி மய்யம் சரவணன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், தஞ்சை மாவட்டத் தலைவர் அமர்சிங், அய்யனார், தமிழ்ச்செல்வன், வீரக்குமார், காங்கிரஸ் கட்சி வழக்குரைஞர் ராஜ்மோகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொகுதி செயலாளர் அண்ணாத்துரை, ஆதித்தமிழர் பேரவை எம்.பி.நாத்திகன், தி.மு.க. அவைத்தலைவர் இறைவன், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் செல்வம், மு.மு.க. மாவட்டச் செயலாளர் பாலா, எஸ்.டி.பி.அய். பேச்சாளர் முபாரக் உள்பட ஏராளமனோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஒலி முழக்கம் எழுப்பினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *