இந்திய பொருளாதாரம் ஆட்டம் இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு! ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச்.14 இந்தியப் பங்குச் சந்தை நேற்றைய (13.2.2026) வர்த்தகத்தின்போது கடும் சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் 1,470 புள்ளிகள் சரிந்து 74,563-இல் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 488 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23,151 புள்ளிகளில் நிலைபெற்றது. பங்குச் சந்தையில்  ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியின் காரணமாக, முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் – இஸ்ரேல், அமெரிக்க போர் பதற்றம் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வருவது உலகளாவிய சந்தைகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போர்ச் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இது இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடு களின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் முன்னெப்போதும் இல்லாத வகையில் 92.45 என்ற வரலாற்றுச் சரிவை சந்தித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையால், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் இந்தியச் சந்தையிலிருந்து முதலீடுகளை தொடர்ந்து விலக்கி வருகின்றனர்.

இதுபோன்ற சாதகமற்ற நிலவரங்களால் வங்கி மற்றும் வாகன உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் கடும் விற்பனை அழுத்தத்திற்கு உள்ளானது. இதுவே சந்தையின் கடும் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *