சென்னை, மார்ச் 13 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
எரிவாயு தட்டுப்பாடு
ஈரான் நாட்டை அமெ ரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தி யாவுக்கு வரும் எரிவாயு, கச்சா எண்ணெய் முத லானவை வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங் கள் மூடப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையை முன்னுணர்ந்து முன் னெச்சரிக்கையான நடவ டிக்கைகளை எடுக்காமல் இந்திய ஒன்றிய அரசு மெத்தனமாக இருந்ததே இதற்கு காரணம். பொது மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாமல், அரசியல் பொறுப் புணர்வோடு செயல் படாத ஒன்றிய பாஜக அரசின் போக்கை மிக வன்மையாகக் கண்டிக் கிறோம். சமையல் எரி வாயு தட்டுப்பாடின்றிக் கிடைப்பதற்கு உடனடி யாக போர்க்கால நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத் துகிறோம்.
நாட்டுக்கு எந்தவொரு நெருக்கடி வந்தாலும் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற அக் கறை இல்லாமல் தனது கார்ப்பரேட் கூட்டாளி களுக்கு அதில் எவ்வளவு லாபம் பார்க்கலாம் என்ற விதத்திலேயே மோடி அரசு செயல்படுகிறது. இப்போதும் கூட அமெரிக் காவில் எண்ணெய் சுத்திகரிப்பு செய்ய மோடியின் கூட்டாளி அம்பானிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவை நெருக் கடியிலிருந்து காப்பாற்று வதற்கு அம்பானிக்கு உதவும் மோடி அரசு இந்திய மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படவில்லை.
எஸ்மா சட்டம் பிறப்பிக்கப்பட்டதாலே எரிவாயு விநியோகம் முறையாக நடந்து விடும் என்று நம்புவதற்கு இல்லை. எஸ்மா சட்டத் தையும் தவறாகப் பயன் படுத்தவே மோடி அரசு முயற்சிக்கும். எனவே இப்படி நாடகமாடி மக் களை ஏய்ப்பதை நிறுத்திக் கொண்டு உருப் படியாக மக்களுக்கு உதவுவது எப்படி என ஒன்றிய அரசு சிந்திக்க வேண்டும்.
போர் முடிந்தாலும்கூட எரிவாயு விநியோகம் சீரடைய பல மாதங்கள் பிடிக்கலாம். எனவே, மக்களுக்கு உதவும் இடைக் கால நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும். மின்சார அடுப்புகளை மானிய விலையில் கிடைக்கச் செய்யவேண்டும். கிராமப் புற மக்களுக்குக் கூடுதலாக மாதம் 10லிட்டர் மண் ணெண்ணெய் இலவசமாக வழங்கவேண்டும். சோலார் மின்வசதி ஏற்படுத்திக் கொள்ள உணவகங்களுக்கு மானியம் வழங்கவேண்டும். தேவையான இடங்களில் மய்யப்படுத்தப்பட்ட சமையல்கூட வசதியை உருவாக்கி இலவசமாக உணவு வழங்கவேண்டும். இவற்றுக்கான நிதிச் சுமையை வழக்கம்போல மாநிலங்களின் தலையில் கட்டாமல் எவருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கும் ‘பிஎம் கேர்ஸ்’ நிதியிலிருந்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
