ஆசிரியர் காலிப் பணியிடம் அறிவிப்பு ‘டெட்’ தேர்ச்சி பெற்றவர்களுக்கு முக்கிய தகவல்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ்நாடு அரசின் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்கும், டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. காலிப் பணியிடங்களின் விரிவான பட்டியல்:

பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலம் மொத்தம் 86 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முதுகலை ஆசிரியர்கள் (மொத்தம் 24 இடங்கள் – கள்ளர் மேல்நிலைப் பள்ளிகள்): ஆங்கிலம் – 5, கணிதம் – 4, வணிகவியல் – 4, விலங்கியல் – 3, இயற்பியல் – 2, வேதியியல் – 2, தாவரவியல் – 2, பொருளியல் – 2.

பட்டதாரி ஆசிரியர்கள் (மொத்தம் 62 இடங்கள்): மேல்நிலைப் பள்ளிகளில் (48 இடங்கள்): அறிவியல் – 34, ஆங்கிலம் – 7, கணிதம் – 5, சமூக அறிவியல் – 2.

உயர்நிலைப் பள்ளிகளில் (14 இடங்கள்): அறிவியல் – 14.

  1. மாதந்திர தொகுப்பூதியம் (Honorarium):

முதுகலை ஆசிரியர்: ரூ. 18,000/-

பட்டதாரி ஆசிரியர்: ரூ. 15,000/-

இடைநிலை ஆசிரியர்: ரூ. 12,000/-

  1. தேர்வு செய்யப்படும் முறை மற்றும் முன்னுரிமை:

சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மற்றும் மூத்த பட்டதாரி, முதுகலை ஆசிரியர் அடங்கிய குழுவின் ஆலோசனையின் பேரில் பள்ளி மேலாண்மைக் குழு இந்த நியமனத்தைச் செய்யும்.

யார் யாருக்கெல்லாம் முன்னுரிமை கொடுக்கப்படும்?

  1. பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு: ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல் முன்னுரிமை. அவர்கள் இல்லையெனில், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரியும் தகுதியுள்ள தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  2. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (டிஆர்பி) போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட முதுகலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அவர்கள் இல்லையெனில், ‘இல்லம் தேடி கல்வி’ தன்னார்வலர்கள் பரிசீலிக்கப்படுவர்.
  3. பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகாமையில் உள்ள தகுதியான நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  4. எந்தவித புகார்களுக்கும் இடமின்றி, முழுமையான கல்வித் தகுதி பெற்ற நபர்களை மட்டுமே பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு தெளிவாக தெரிவித்துள்ளது.

தற்காலிக பணி

  1. இந்த நியமனங்கள் முற்றிலும் தற்காலிகமானவை. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை மட்டுமே இவர்கள் பணியில் நீடிப்பார்கள்.
  2. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை பணி நியமனத்தின் போதே தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

இந்த ஆசிரியர் நியமனத்துக்கு 2025-2026 நிதியாண்டிற்கான இறுதி மூன்று மாதங்களுக்கு ரூ. 40,86,000/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோரின் கோரிக்களை ஆய்வு செய்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

தற்காலிகப் பணி என்பதால் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் காலிப் பணியிடம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *