திராவிடர் கழக தீர்மானமும், திட்டக் குழுவின் ஆய்வறிக்கையும்

8 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கிக் (GIG) தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு – திராவிட சமூக நீதி அரசியலின் அவசியம்:

நவீன பொருளாதார அமைப்பின் பெயரில் வளர்ந்து வரும் செயலி (App) சார்ந்த கிக் பொருளாதாரம் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்களை தற்காலிக மற்றும் பாதுகாப்பற்ற வேலைகளில் ஈடுபடச் செய்து வருகிறது. உணவுப் பகிர்வு, பொரு

கிக் (GIG) தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு – திராவிட சமூக நீதி அரசியலின் அவசியம்:

நவீன பொருளாதார அமைப்பின் பெயரில் வளர்ந்து வரும் செயலி (App) சார்ந்த கிக் பொருளாதாரம் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்களை தற்காலிக மற்றும் பாதுகாப்பற்ற வேலைகளில் ஈடுபடச் செய்து வருகிறது. உணவுப் பகிர்வு, பொருள் பகிர்வு போன்ற சேவைகளில் பகலிரவு பாராது உழைக்கும் இளைஞர்கள் நகர வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் புதிய உழைப்பாளர் படையாக உருவாகியுள்ளனர்.

ஆனால் இந்த உழைப்பாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், மருத்துவ பாதுகாப்பு, விபத்து காப்பீடு, ஓய்வூதியம், தொழிலாளர் உரிமைகள் போன்ற அடிப்படை சமூகப் பாதுகாப்புகள் மறுக்கப்பட்டுள்ளது என்பது மிகுந்த கவலைக்குரிய நிலையாகும்.

மேலும், இத்துறையில் பணிபுரியும் பெரும்பாலான வர்கள் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என்பதும் சமூகநீதியின் கோணத்தில் மிகவும் முக்கியமான விடயமாகும்.

பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கமும், அதனைத் தொடர்ந்து வளர்ந்த திராவிட இயக்கமும் உழைக்கும் மக்களின் உரிமைகள், சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித மரியாதை ஆகியவற்றை அடிப்படை இலட்சியங்களாகக் கொண்டு போராடி வந்துள்ளது. இந்த வரலாற்றுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, புதிய பொருளாதார சூழலில் உருவாகியுள்ள கிக் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இதை உணர்ந்து, தஞ்சையில் 21.02.2026 அன்று நடைபெற்ற திராவிடர் கழக மாணவர் மற்றும் இளைஞர் அணி மாநில மாநாடு கிக் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

கிக் (GIG) பணியாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்க.

‘‘நாட்டின் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் படித்த பட்டதாரிகள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினர், செயலி துணை கொண்டு உணவு, பொருட்கள் பகிர்வு உள்ளிட்ட தற்காலிகப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  அத்தொழி லாளர்களுக்கு, சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமத்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக உரிமைகள் சார்ந்த சட்டங்களை உருவாக்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. முதல்கட்டமாக இத்தொழிலாளர்களைக் கணக்கில் கொண்டு சில முன்னெடுப்புகளையும், ஓய்விடங்கள் போன்ற அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் தமிழ்நாடு அரசுக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், நேற்றைய தினம் வெளியிடப்பட்ட தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் ஆய்வறிக்கையும் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் அடிப்படை நல வசதிகளை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தனது ஆய்வறிக்கையில், பாரா 9 இல்,  தமிழ்நாட்டில் இணையம் சார்ந்த கிக் (Gig) தொழிலாளர்களின் நிலைப் பற்றிய ஆய்வு எனும் தலைப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் இணையம் சார்ந்த கிக் (Gig) தொழி லாளர்களின் நிலைப் பற்றிய ஆய்வு, களப்பணியாளர் களின் தற்போதைய நிலைமைகள், தேவைகள் மற்றும் விருப்பங்களை மதிப்பிடுவதற்கும், தொழிலாளர் நலன் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், உலகளாவிய நியாயமான பணி தரநிலைகளுக்கு இணங்க கொள்கையை உருவாக்குவதற்கும் வழி வகை செய்கிறது. இதற்கென, தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் 255 தொழிலாளர்களிடம் நேரடி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாய்வின் முக்கிய பரிந்துரைகள்:

  • தளப் பணியாளர்களுக்கென தனித் தன்மையான மாநில சமூகப் பாதுகாப்பு நிதியினை நிறுவி (State Social Security Fund), சுகாதார காப்பீடு, மகப்பேறு உதவி, ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு, விபத்து, இறப்பு இழப்பீடு ஆகியவற்றை வழங்குதல் மற்றும் ஏற்கனவே உள்ள நலத்திட்டங்களை தளப் பணியாளர்களுக்கு திறம்படப் பயன்படுத்துதல்.
  • தமிழ்நாடு கிக் தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Gig Workers Welfare Board) இணையதளம் மூலம் தளப் பணியாளர்கள் மற்றும் தள நிறுவனங்களின் பொதுப் பதிவு (universal registration) கட்டாயமாக்குவதோடு EShram UID முறையுடன் ஒருங்கிணைத்தல் மூலம் ஒன்றிய மற்றும் மாநில அரசு நலத் திட்டங்களின் பயன்களை தடையற்ற வகையில் அணுக உதவுதல்.
  • செஸ் வரி வசூல் (cess collection), நிதி மேலாண்மை (fund management) மற்றும் நலத் திட்டப் பயன்கள் வழங்குதல் (welfare disbursement) ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்ய மய்ய கண்காணிப்பு முறையை (Central Transaction Monitoring System – CTIMS) செயல்படுத்துதல்.

என அந்த அறிக்கையில், செயலி வழி பணிபுரியும் தொழிலாளர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு அரசின் கணக்கெடுப்பு, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் அடிப்படை நல வசதிகள் வழங்கப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது

கிக் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்வது என்பது வெறும் தொழிலாளர் நல நடவடிக்கை மட்டுமல்ல; அது உழைக்கும் மக்களின் மரியாதையை காக்கும் சமூக நீதி அரசியலின் அவசியமான முன்னேற்றமாகும்.

திராவிடர் கழக தீர்மானங்கள், சட்ட வடிவம் பெறும் என்பது வரலாறு. இத்தீர்மானமும், சட்ட வடிவம் பெற வேண்டும், பெறும்.

– குடந்தை கருணா

11.03.2026

ள் பகிர்வு போன்ற சேவைகளில் பகலிரவு பாராது உழைக்கும் இளைஞர்கள் நகர வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் புதிய உழைப்பாளர் படையாக உருவாகியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *