யுபிஎஸ்சி குடிமைப்பணி தேர்வில் மிரட்டல்… தேர்ச்சி பெற்ற 299 பெண்கள் – ‘டாப்’ 25இல் 11 மகளிர்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), 2025 குடிமைப் பணித் தேர்வுக்கான (CSE) முடிவுகளை கடந்த 6.3.2026 அன்று வெளியிட்டது. அய்ஏஎஸ், அய்எஃப்எஸ், அய்பிஎஸ், மத்திய சேவைகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி பதவிகளுக்கு மொத்தம் 958 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

299 பேர் பெண்கள்

வழக்கத்தை போல், மகளிர் தேர்வர்கள் இந்தாண்டிலும் குடிமைப் பணித் தேர்வில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர், கணிசமான இடங்களையும் மகளிர் பெற்றுள்ளன. மொத்தம் தேர்ச்சி அடைந்த 958 பேரில், 299 பேர் மகளிர் என்பது கவனிக்க வேண்டியது.

முதல் வரிசை (‘டாப்’) இடங்களை
பிடித்த பெண்கள்

மதுரையை சேர்ந்த ராஜேஸ்வரி சுவே என்ற பெண்மணிதான் அகில இந்திய அளவில் 2ஆவது இடத்தை பிடித்தார். மேலும், ஜின்னியா அரோரா (6ஆவது இடம்), ஆஸ்தா ஜெயின் (9ஆவது இடம் ) என மொத்தம் முதல் 10 இடங்களில் மூன்று இடங்களில் பெண்கள் தேர்ச்சி பெற்றனர். மேலும், 2025 தேர்வில் முதல் 25 இடங்களில் 11 பேர் பெண்கள் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

சமூக வாரியான விவரங்கள்

2025 குடிமைப் பணித் தேர்வில், தேர்ச்சியடைந்தவர்களின் சமூக வாரியான விவரங்களையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வான 958 பேரில் 317 பேர் பொதுப் பிரிவினர், 104 பேர் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS), 306 பேர் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (OBC), 158 பேர் பட்டியல் சமூகத்தினர் (SC), 73 பேர் பட்டியல் பழங்குடியினர் (ST) ஆவர்.

தமிழ்நாட்டில் டாப் 3 யார்?

தமிழ்நாட்டில் இருந்து 56 பேர் தேர்வாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து ராஜேஸ்வரி சுவே (2ஆவது), ஏ.ஆர். ராஜா மொஹைதீன் (7ஆவது), ஸ்ருதி.ஆர் (18ஆவது) ஆகிய மூன்று பேர் டாப் ரேங்க் பெற்றுள்ளனர். 56 பேரில் பெரும்பாலானோர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்தவர்கள்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *