பாபநாசம், மார்ச் 9- கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் சிந்தனைக் களம் – 11, கபிஸ்தலம் மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் 28.2.2026 சனிக்கிழமை மாலை 6.30க்கு நடைபெற்றது.
கூட்டத்திற்கு பாபநாசம் ஒன்றிய கழக செயலாளர் சு.கலியமூர்த்தி தலைமை ஏற்று நடத்தினார்.
கும்பகோணம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் திருஞானசம்பந்தம் வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார்.
பாபநாசம் ஒன்றிய பகுத்தறி வாளர் கழகத் தலைவர் மு.சேகர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி. மோகன் மறைந்த தகைசால் தமிழர், பொதுவுடமை இயக்கப் போராளி தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் வாழ்வின் சில நிகழ்வுகளை எடுத்துக் கூறி அவருடைய இழப்பு இந்த சமு தாயத்திற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பதை விளக்கி அவருக்கு வீரவணக்கம் செலுத்திடவும் நமது இரங்கலை தெரிவிக்கவும் ஒரு நிமிடம் அமைதி காக்க வேண்டினார். அனைவரும் எழுந்து நின்று அமைதி காத்தனர்.
அடுத்து சிறப்புரையாற்ற வருகை தந்தவரை தனது எளிமையான உரையால் சிறப்பாக அறிமுகப்படுத்தி உரையாற்றிட அழைத்தார் மேனாள் சிங்கப்பூர் தமிழ் பேராசிரியர் ப.திருநாவுக்கரசு.
ஆசிரியர் கி வீரமணியின் வாழ்வியல் சிந்தனை பாகம் – 4 ஓர் அறிமுகம் என்னும் தலைப் பில் ஆசிரியர், எழுத்தாளர், வலையொளியாளர் ‘மானுடம் போற்றுவோம்’ கரந்தை ஜெயக் குமார் மிகச் சிறப்பாக 60 நிமிடங்கள் வாழ்வியல் சிந்தனைகள் பாகம்-4 நூலிலிருந்து 25 தலைப்பு களை மட்டும் எடுத்துச் சொல்லி நூலில் மீதியை படியுங்கள் என்று அழகான வேண்டுகோளோடு முடித்தார்.
தனது உரையை தொடங்கும் முன் ஆசிரியர் அவர்களை பார்வை யாளர்களுக்கு புதிய கோணத்தில் அறிமுகம் செய்தார்.
மிகச் சிறப்பாக வருகை தந்த பொதுவான பார்வையாளர்களை தனது உரையால் கட்டிப்போடு நூலின் சுவையை அழகாக எடுத்துக் காட்டினார்.
தொடர்ந்து கூட்டத்திற்கு தொடர் வருகை புரிந்தவர்களுக்கும் புதிதாக வந்தவர்களுக்கும் அய்யாவின் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.
நிகழ்வை பெரியார் கண்ணன் ஒருங்கிணைத்தார். நாகராஜ் நேரலை செய்தார்.
இறுதியில் ஆசிரியர் மா.துரை யரசன் நன்றி கூறிட கூட்டம் சரி யாக 8.00 மணிக்கு முடிவுற்றது.
