வாருங்கள் வாசிப்போம், சுவாசிப்ேபாம் (2)

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அண்மையில் வெளியாகிய அரிய நூல்களில் ஒன்று – ‘செயற்கை நுண்ணறிவு’ பற்றிய ஒரு முக்கியமான புத்தகம். இரண்டு பேர் இணைந்து உருவாக்கிய ஓர் அருமையான கலைச்செறிவுள்ள “The Coming Wave” – ‘‘வருகின்ற புதிய அலை’’ என்பதாகும்.

அந்த நூலின் இரண்டு ஆசிரியர்கள்

1) முஸ்தபா சுலைமான், 2) மைக்கேல் பாஸ்கர்.

இதில் முஸ்தபா சுலைமான் அவர்களுடன் மைக்கேல் பாஸ்கர் இணைந்து உருவாக்கிய இந்த நூலில், ஒரு புதிய அணுகுமுறை, கருத்தியலாக – செயற்கை நுண்ணறிவு பற்றிய ஆழ்ந்த சில ஆலோசனைகளை ஆக்கப் பூர்வமாக, முஸ்தபா சுலைமான்  தந்துள்ளார்.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி யிலுள்ள  பிரபல கம்பெனியான “Deep Mind” என்ற நிறுவனத்தின் நிறுவனரும் –  கூகுள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவுபற்றிய தனித்துறை பொறுப்பிலுள்ள வல்லுநருமாவார் முஸ்தபா.

அதேபோல, மைக்கேல் பாஸ்கர் இங்கிலாந்து எழுத்தாளரும் – வெளியீட்டாளருமாவார்.

இந்த நூல் படிக்கப் படிக்க மிகவும் சுவையானதாகவும், சிக்கலான செயற்கை நுண்ணறிவு பற்றிய தகவல்கள் – அதனால் உருவாகும் விளைவுகள் பற்றி எளிய முறையில் விளக்குவதோடு, அதனால் ஏற்படவிருக்கும் பயன்கள் மனித சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் பெரியதாகவும், சிறப்பானதாகவும் உள்ள ஒன்று – அதே நேரத்தில், அதனால் மனித குலத்தின் வீழ்ச்சிக்கும் தவறான திசை திருப்பல்களும், எதிர் விளைவுகளும் அதிகம் என்பதுதான் உலகெங்கும் நடைபெறும் வாதப் பிரதிவாதங்களாகும்.

அதுபற்றிய விளக்கத்தில் –  தொழில் நுட்ப வளர்ச்சியில் அறிவியல் ஏற்படுத்தும் நேர்மறை மாற்றங்களின் போதெல்லாம் இந்த எதிர்விளைவுகள் தவிர்க்க முடியாததுதான் என்றும், அதனை வென்று காட்ட  ஆக்க ரீதியான சிலவற்றை நாம் பயன்படுத்தி, தீய விளைவு களிலிருந்து நன்மைகளை விரிவாக்க அரிய யோசனைகள் – திட்டங்கள் இந்நூலில் மிகத் துல்லியமாகக் கூறப்பட்டுள்ளது.

பழைய தொழில் நுட்ப நீராவி எஞ்சின், அச்சு இயந்திரம் போன்றவைகளை இரண்டாம் உலகப் போரை நிறுத்தப் பயன்படுத்திய அணுகுண்டு – அதன் ஆபத்தான பின்விளைவு –இவற்றையெல்லாம் நூலாசிரியர்கள் மிக அருமையாக, தெளிவாக விளக்குகிறார்கள்.

‘வருகின்ற புதிய அலை’ (“The Coming Wave”) என்ற தலைப்பு எதைக் கொண்டு அமைந்துள்ளது என்பதை சற்று பின்னோக்கி ஆராயலாமே!

ஆல்வின் டாஃப்ளர் (Alvin Toffler) என்ற பிரபல அமெரிக்க கருத்தாழ மிக்க எழுத்தாளர் முன்பு ஒரு நூலை எழுதினார். அதற்கு ‘Third Wave’ (‘மூன்றாம் அலை’) என்று தலைப்பிட்டிருந்தார்.

மனிதகுலம் துவக்கத்தில் வேட்டையாடி உணவு முதலிய பொருள்களை சேகரிக்கும் கால கட்டம் வரை ‘Hunter–  Gatherer’ சமூகமாகத் தொடங்கியது.

பகுத்தறிவு – வளர்ச்சியின்றி காட்டுவனங்களில் திரிந்த கூட்டமாக இருந்தது. பிறகு வளர்ச்சியடைந்து, பகுத்தறிவைப் பயன்படுத்தி, உணவுக்கு – வேளாண்மையைக் கண்டுபிடித்து, நாடோடியாக இருந்த சமூகம் – நிலை பெற்று ‘பயிர்த் தொழில்’ செய்து வளர்ந்து முதல் அலை கட்டத்தை அடைந்தது.

அதற்கடுத்து,  அதே மக்கள் – தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளில் உண்டான வளர்ச்சியின் பயனாய்  இயந்திரங்கள் மூலம் ‘தொழிற் புரட்சி’ (Industrial Revolution) – இரண்டாம் அலை ஏற்பட்டது.

அது இரண்டாம் அலையாக இருந்து, மின்னணுத் துறையில் ஏற்பட்ட  ‘தகவல்’ – ‘தகவல் புரட்சி’ முதலியவற்றின் துணையோடு வளர்ந்தது. அதுவே மூன்றாம் அலை (Third Wave) ஆகும்!

அதனால்தான் இப்போது, எண்ணிப் பார்க்க முடியாத அளவில் ‘செயற்கை நுண்ணறிவு’ அலை உருவாகி உலகத்தை வியப்பான உச்சிக்குக் கொண்டு செல்கிறது.

செயற்கை நுண்ணறிவு மூலம் எப்படி எதிர் விளைவுகளை – அல்லது விரும்பத்தகாத விளைவுகளுக்குள் செல்லும் மனித குலத்தை கரையேற்றி, புதுமையான புத்தாக்கத்தை மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படுத்துவது என்பதை இந்நூல் நன்கு விளக்குகின்றது – படித்துப் பயன் பெறுவீர்களாக!

(தொடரும்)

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *