சென்னை, மார்ச் 2 மார்ச் முதல் மே மாதம் வரையிலான வெப்பநிலை மற்றும் மழை தொடர்பான வானிலை கணிப்பை இந்திய வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு தீபகற்பத்தின் (வட தமிழ்நாடு, கடலோர தமிழ்நாடு) பல பகுதிகளிலும், வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய இந்தியாவின் சில பகுதிகளிலும் மார்ச் முதல் மே 2026 வரையிலான காலகட்டத்தில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக அதிகபட்சமாக 15 நாட்கள் வரை வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் நிலவ வாய்ப்புள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் போதுமான நீரை அருந்த வேண்டும். அதிக வெயில் இருக்கும் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெப்ப அலையில் எளிதில் பாதிக்கப்படும் மக்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அவர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
