இந்தியாவில் “மக்கள் விகிதாச்சாரம் என்ன? மக்கள் மனநிலை என்ன?” என்பதற்குரிய ஆரூடம், சோசியம் பார்க்க வேண்டியதில்லை. மக்களுக்கு இருக்கும் வகுப்புணர்ச்சியைத் தெரிந்துகொள்ள “மை” வைத்துப் பார்க்க வேண்டியதுமில்லை அவ்வப்போது நடக்கின்ற தேர்தல்களில் வெளிவருகின்ற முடிவுகளைப் பார்த்தாலே, அவனவன் ஜாதியைத்தான் அவனவன் விரும்புகின்றான் என்கிற நிலைதானே உள்ளது. இது அவமானத்திற்குரியது என்பதை மக்கள் உணர வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
