பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் நம் நாட்டின் கொள்கைக்கு எதிரானது மெகபூபா முப்தி விமர்சனம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிறீநகர், பிப்.27 இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள அவருக்கு அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு தலைமையில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு தலைவர்களும் இருநாட்டு உறவு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இஸ்ரேல் நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மேனாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறியதாவது:-
பிரதமர் மோடியின் பயணம் நம் நாட்டின் கொள்கைக்கு எதிரானது. இன்று, ஒட்டுமொத்த உலகமும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக உள்ளது. பன்னாட்டு கிரிமினல் நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்துள்ளது. கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் அவர் பல நாடுகளுக்கு செல்லாமல் உள்ளார்.
140 கோடி மக்களின் பிரதிநிதியான பிரதமர் மோடி, இஸ்ரேல் சென்று குற்றவாளியை கட்டி பிடிக்கிறார். அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இது காந்தியாரின் இந்தியாவான நம்முடைய நாட்டிற்கு நல்லது அல்ல என்று நினைக்கிறேன்.
இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *