ஒரு பெண் கல்வி கற்றால், அந்தக் குடும்பத்தின் 5 தலைமுறை உயரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.24- இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை கொளத்தூரில் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.31 கோடியே 45 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.2.2026) திறந்து வைத்தார். விழாவில் அவர் ஆற்றிய உரை வருமாறு:

இந்தக் கல்லூரியால், கொளத்தூர் மட்டுமல்லாமல், சென்னையின் பல பகுதிகளைச் சார்ந்த மாணவர்களும், இதனால் பயனடையப் போகிறார்கள். அறநிலையத் துறை சார்பாக, கல்வி எனும் அறப்பணிக்கு இந்தக் கல்லூரி ஒரு சாட்சியாக இருக்கிறது.

மாணவர்களுக்கு நான் சொல்வது, கல்வி தான் உங்களுக்கு எல்லாவற்றையும் வழங்கும்! அதனால் தான், அனைத்து இடங்களிலும் தொடர்ந்து சொல்கிறேன் – படியுங்கள்! படியுங்கள்! படியுங்கள்! அதுதான் உங்களை உயர்த்தும்!

எல்லோருக்கும் இது பிப்ரவரி மாதம்! ஆனால், தி.மு.க.வுக்கு இது ‘மாநாடு மாதம்’. அந்த அளவிற்கு கடந்த 20 நாட்களாக, தமிழ்நாடு முழுவதும் சுற்றி, சுற்றி மாநாடுகளில் நான் பங்கெடுத்து கொண்டு வந்திருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரைக்கும், கொளத்தூருக்கு வந்து, உங்களுக்காக உழைப்பதுதான் எனக்கு ரெஸ்ட் கிடைப்பதில் உற்சாகம். உங்களுக்கான திட்டங்களை தொடங்கி வைப்பது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது, உங்களுடன் சேர்ந்து பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற விழாக்களை கொண்டாடுவது, இவையெல்லாம்தான் எனக்கு பெரிய பூஸ்ட்! ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும்போது, உங்களை வந்து பார்த்தால் போதும், ரிலாக்ஸ் ஆகிவிடுவேன்; இல்லை ஃபிரி ஆகிவிடுவேன்.

திராவிடமாடல் அரசின்
‘மாடல் தொகுதி’ எது?

இன்றைக்கு, இந்தியா முழுவதும் பின்பற்றும் மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது என்றால், அந்த திராவிட மாடல் அரசின் “மாடல் தொகுதி”-யாக இருப்பது கொளத்தூர்தான்.

சிலவற்றை மட்டும் நான் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புவது, ஜெகன்னாதன் தெருவில் அமைக்கப்பட்டிருக்கின்ற முதல்வர் படைப்பகம்! வாரத்திற்கு ஏதாவது ஒரு மீடியாவில், முதல்வர் படைப்பகம் எந்தளவுக்கு வெற்றிகரமாக செயல்படுகிறது; எத்தனை நபர்களுடைய வாழ்க்கை இதனால் மாறியிருக்கிறது என்று செய்திகள், பேட்டிகள், பதிவுகள் வந்து கொண்டே இருக்கிறது.

அதிநவீன வசதிகளுடைய
பெரியார் நகர் மருத்துவமனை

பெரியார் நகரில் இருக்கின்ற மருத்துவமனை – பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டு, பல அதிநவீன வசதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அதிகமான வட இந்திய மக்கள் கூட அங்கு வந்து இந்த மருத்துவமனையை பார்த்துவிட்டு, ஆச்சரியமாக சோஷியல் மீடியாவில் ரீல்ஸ் போட தொடங்கி இருக்கிறார்கள். நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இதன் தொடர்ச்சியாகதான், இன்றைக்கு கொளத்தூரில்,ஏர் கண்டிஷன் பஸ் ஸ்டாப், செம்பியம் ரெட் ஹில்ஸ் சாலையில், ‘சாலையோர பூங்கா’, நியாய விலைக் கடை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மய்யக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்திருக்கிறேன்.

2007 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் இன்றைக்கு வழங்க இருக்கிறோம். கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரிக்கு 31 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில், புதிய கட்டடங்களை திறந்து வைத்திருக்கிறோம்.

இது கொளத்தூருக்கு மட்டுமல்ல, இதேபோல, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு ஊரிலும், இதுவரை நடக்காத அளவிற்கு முன்னேற்றப் பணிகளை செய்திருக்கிறோம். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும், எங்கும் இல்லாத வகையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம்.

பெண் கல்வியின் முக்கியத்துவம்!

அதில் குறிப்பாக, பெண்களுடைய முன்னேற்றத்திற்கு அடிப்படையாக, அவர்களுக்குப் பொருளாதார அதிகாரத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உருவாக்கிய திட்டம் தான் 1 கோடியே 31 இலட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருகின்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

பெண்கள் பணிகளுக்காக வெளியில் செல்வதற்கு அடுத்தவரை எதிர்பார்த்து காத்திருக்கக்கூடாது என்று உருவாக்கப்பட்டது தான் சுமார் 900 கோடி பயணங்களுக்கு மேல் மகளிர் பயன் பெற்றிருக்கக்கூடிய விடியல் பயணத் திட்டம்.

ஒரு பெண் கல்வி கற்றால், அந்த குடும்பத்தின் நான்கைந்து தலைமுறை உயரும் என்று பெண்கள் பட்டப்படிப்பு பெற, ஊக்கமளிக்க தொடங்கப்பட்ட திட்டம் தான் 6 இலட்சத்து 95 ஆயிரத்து 296 மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடிய “புதுமைப் பெண் திட்டம்”.

தொழில்நுட்பமும், வளர்ச்சியும் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்கவேண்ளடும் என்று “உலகம் உங்கள் கையில்” என்று 10 இலட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கியிருக்கிறோம்.

அதைப் போல பயிற்சி சான்றிதழ்கள், “நான் முதல்வன்” திட்டம், 19 இலட்சத்து 34 ஆயிரம் குழந்தைகள் சூடாக, சுவையாக, சத்தாக சாப்பிடுகின்ற “காலை உணவுத் திட்டம்”.

இதுமட்டுமல்ல, உங்களுடன் ஸ்டாலின், நலன் காக்கும் ஸ்டாலின், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48, பாதம் காப்போம், இதயம் காப்போம், ஊட்டச் சத்தை உறுதி செய், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், தாயுமானவர், அன்புக்கரங்கள், அன்புச் சோலை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கைவினைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், தோழி விடுதிகள், மாற்றுத் திறனாளிகள் உரிமைத் திட்டம், உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடி நியமனம். சொல்லும்பொழுதே, எனக்கே மூச்சிறைக்கிறது.

இதுதான் திராவிட மாடல். திராவிட மாடல் என்ன? என்ன? என்று கேட்கிறார்களே! இதுதான் திராவிட மாடல். மக்களை மய்யப்படுத்தி, மக்களை தேடி வந்து சேவைகளை வழங்குகின்ற மக்களாட்சியாக திராவிட மாடல் பெயரெடுத்திருக்கிறது.

இந்த நல்லாட்சி தொடர, நம்முடைய கொளத்தூர் மேலும், மேலும் உயர, உங்களுடைய ஆதரவு என்றும் எங்களுக்கு இருக்கும்; இருக்கும் என்ற நம்பிக்கையோடு நான் விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *