பரேலி, பிப்.19 உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி (Bareilly) மாவட்டத்தில், ஒரு தனியார் வீட்டில் தொழுகை நடத்தி யவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை (நோட்டீஸ்) அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
வீட்டில்
தொழுகை
அண்மையில் பரேலி மாவட் டம் முகமதுகஞ்ச் கிராமத்தில் உள்ள ஒரு காலி வீட்டில் (தனியார் சொத்து) சிலர் தொழுகை நடத்தினர். இதனை அப்பகுதியில் உள்ள ஹிந்து அமைப்பினர் படமாக எடுத்து காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனை அடுத்து அனுமதியின்றி தொழுகை நடத்தியதாகக் கூறி, அங்கிருந்த 12 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்
இதே போன்ற ஒரு வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் ஒரு தெளிவான உத்தரவை வழங்கியிருந்தது. அதில், “ஒருவர் தனது சொந்த வீட்டில் அல்லது தனியார் இடத்தில் தொழுகை நடத்தவோ, மத வழிபாடுகள் செய்யவோ அரசின் அனுமதி தேவையில்லை. அந்த வழிபாடு பொது இடங்களுக்கு இடையூறு விளைவிக்காத வரை அது சட்டப்படி செல்லும்” என்று கூறப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தும், பரேலி காவல்துறையினர் தொழுகை நடத்தியவர்கள் மீது வழக்குத் தொடர்ந்ததை எதிர்த்து தாரிக் கான் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், “நீதிமன்ற உத்தரவை மீறி ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பியது.
மாவட்ட ஆட்சியர்மீது நடவடிக்கை
இதன் விளைவாக, பரேலி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் சிங் மற்றும் காவல் கண்காணிப் பாளர் (SSP) அனுராக் ஆர்யா ஆகியோருக்கு நீதிமன்ற அவ மதிப்பு அறிவிக்கை அனுப்பப்பட் டுள்ளது.
மனுதாரர் மற்றும் அங்குள் ளவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள அனைத்து கடுமையான நட வடிக்கைகளுக்கும் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித் துள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க 11.3.2026 அன்று அதிகாரிகளுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
