செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க
முதல் மாகாண மாநாடு [17.02.1929]
1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநில மாநாடு இன்றைய தேதியில்தான் (17.2.1929) வெகு சிறப்புடன் தொடங்கி நடைபெற்றது. 97 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்த இரண்டு நாள் மாநாட்டின் தீர்மானங்கள்தான் தொடர்ந்து 100 ஆண்டு களுக்குத் தேவையானத் திட்டங்களை வடித்துத் தந்துள்ளன. மாநாட்டிற்கு தலைமை வகித்தார் தந்தை பெரியார். சுயமரியாதை இயக்கத்தின் தூண்கள் பலர் மாநாட்டை வெகு சிறப்புடன் நடத்தினர்.
மாநாட்டுத் தீர்மானங்கள் புரட்சிகர மானவை. மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அனைவரின் பெயருக்குப் பின் ஜாதிப் பட்டம் போடக் கூடாது.
பெண்களுக்கு ஆண்களைப்போல் சொத்தில் சம உரிமை
பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை.
பெண்கள் திருமண வயது 16க்கு மேல் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு அனைத்துத் துறை களிலும் சம உரிமை வேண்டும்.
பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட வேண்டும்.
பெண்கள் பள்ளி ஆசிரியர் களாக வேண்டும்.
பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட வேண்டும்.
பெண்களுக்கு அனைத்து துறையிலும் 50% இட ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
இவ்வாறு பல்வேறு புரட்சிகரமான தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்தீர்மானங்களில் பல தமிழ்நாடு மற்றும் ஒன்றிய அரசில் தற்போது சட்டமாக்கப்பட் டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
