தஞ்சை மாநாட்டுக்கு பெருந்திரளாகக் கூட மகளிரணி, மகளிர் பாசறைக் கூட்டத்தில் முடிவு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திராவிடர் கழகம்

சென்னை, பிப்.15–- 1.2.2026 அன்று திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம், சென்னை பெரியார் திடல் சுயமரியாதை திருமண நிலையத்தில், துணைப் பொதுச் செயலாளர்  சே.மெ மதிவதனி தலைமையில் நடைபெற்றது.

மாநில மகளிர் அணி துணை செயலாளர் குடியாத்தம் ந.தேன்மொழி வரவேற்புரை ஆற்றினார்.

மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து  உரையாற்றினார்.

மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் இறைவி, மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் அம்பிகா கணேசன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் பெரியார் செல்வி, மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் பாக்யலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தார்கள்.

மாநில மகளிர் பாசறை துணை செயலாளர் சேலம் காயத்ரி, மாநில மகளிர் அணி துணை செயலாளர் இந்திரா காந்தி, ஆகியோர் காணொலி வழியாக கலந்து கொண்டனர்.

மாநில பொறுப்பாளர்களுக்கும், நடைபெற்றுக் கொண்டிருந்த சென்னை மாவட்டங்களின் இணைந்த கலந்துரையால் கூட்டத்தில் கலந்து கொண்ட மகளிர் தோழர்களுக்கும், கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்பான ஒரு வழிகாட்டுதல் உரையை நிகழ்த்தினார் .

துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தன்னுடைய வழிகாட்டுதல் உரையில் மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை என்பது இந்தக் காலகட்டத்தில் தான் இவ்வளவு சிறப்பாக வலிமையாக அமைப்பு ரீதியாக கட்டப்பட்டுள்ளது.

அய்யா அவர்கள் காலத்தில் மகளிர் அணி என்ற ஓர் அமைப்பு அமைக்கப்பட்டு கிருஷ்ணகிரி என்.எஸ்.பிரபாவதி ஒரு அமைப்பாளராக இருந்தார் என்ற செய்தியையும் நினைவுகூர்ந்தார்.

மகளிர் அணி, மகளிர் பாசறை தோழர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்ற பாராட்டையும் தெரிவித்தார்.

தோழர்கள் குறிப்பாக மகளிர் தோழர்கள் மாநாட்டுக்கு தங்கள் மாவட்டத்தில் உள்ள பொறுப்பாளர் தோழர்களையும் தன்னுடைய உறவுகளையும் அழைத்துக் கொண்டு வரவேண்டும்..

அதே நேரத்தில் புதிய மகளிர் தோழர்களை, பெரியார் இயக்கம் என்றால் என்ன என்று தெரியாத மகளிர் தோழர்களை அழைத்து வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திராவிடர் கழகத்தில் இருப்பதே ஒரு மிகப்பெரிய வலிமையாகவும் பெருமையாகவும் மகளிர் தோழர்கள் நினைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் ..

திருச்சி சிறுகனூரில்  பெரியார் உலகத்தை உலகம் போற்றும் வகையில் நிறுவ வேண்டும், என்றும், அந்த வழியில் மகளிர் தோழர்கள் உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் ..

கலந்து கொண்ட மகளிர் தோழர்களுக்கு சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் சமோசா மற்றும் தேநீர் வழங்கினார்.

கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தீர்மானங்கள்

  1. 21.2.2026 அன்று தஞ்சாவூரில் தமிழர் தலைவர் அறிவித்துள்ள திராவிடர் கழக மகளிர் அணி, திராவிட மகளிர் பாசறை மாநாட்டிற்கு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அதிக அளவில் மகளிர் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் ..
  2. கழக மாவட்டங்கள் தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ கலந்துரையாடல் கூட்டங்களை ஏற்பாடு செய்து மாநாட்டுக்கு செல்ல வேண்டியது பற்றி பேச வேண்டும்.

வாகன ஏற்பாடுகள் குறித்தும், முன்பதிவு செய்ய வேண்டிய பிரயாணங்கள் குறித்தும் பேச வேண்டும்

  1. கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்படாத மாவட்டங்களில் உடனடியாக கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்பட்டு பொறுப்பாளர்கள் பட்டியல் தெரிவு செய்யப்பட வேண்டும்.
  2. மகளிர் அணி, மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படாத மாவட்டங்களுக்கு தமிழர் தலைவர் அவர்களால் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட வாய்ப்பாக துணைத் தலைவருடன், பொறுப்பாளர்களின் பெயர்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
  3. துணைத் தலைவர் தன்னுடைய வழிகாட்டுதல் உரையில் தெரிவித்தபடி, இயக்கம் பற்றி தெரியாத, புது மகளிரை மாநாட்டிற்கு தோழர்கள் நிறைய அழைத்து வர வேண்டும்.
  4. மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் முகவரிகளும் கைப்பேசி எண்களும் பட்டியலிடப்பட வேண்டும் ..
  5. துணைத் தலைவரின் வழிகாட்டுதல்படி மகளிர் அணி மகளிர் பாசறை சார்பாக கிராமங்கள் தோறும் மற்றும் நகரங்களிலும் துண்டறிக்கை பிரச்சாரம் இந்த காலகட்டத்தில் அதிகம் நடத்தப்பட வேண்டும்..
  6. தஞ்சாவூர் மகளிர் அணி பாசறை மாநாடு whatsapp குழுவை தொடர்ந்து மகளிர் தோழர்கள் கவனித்து வரவேண்டும் அவ்வப்போது செய்திகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இறுதியாக தோழர் இறைவி நன்றி உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *