இந்நாள் – அந்நாள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவின் விடுதலைக்குப் பிறகு, நடத்தப்பட்ட முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாள் இன்று (9.2.1951)

இந்தியா 1947-இல் சுதந்திரம் அடைந்து, 1950-இல் குடியரசு நாடாக மாறிய பிறகு நடத்தப்பட்ட முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1872 முதல் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டாலும், இதுவே குடியரசு இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும்.

பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கி மார்ச் 1, 1951 வரை நீடித்தது. இந்தக் கணக்கெடுப்பின் முடிவில் இந்தியாவின் மக்கள் தொகை 36,10,88,090 (சுமார் 36 கோடி) எனப் பதிவானது.அப்போதைய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையராக ஆர்.ஏ. கோபாலசாமி  பணியாற்றினார்.1947 இந்தியப் பிரிவினைக்குப் பிறகு மக்கள் தொகையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் அகதிகளின் வருகையைத் துல்லியமாகப் பதிவு செய்ய இது உதவியது. நாட்டின் முதல் அய்ந்தாண்டுத் திட்டத்தைத் தீட்டுவதற்கும், சமூக-பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கவும் இத்தரவுகள் அடித்தளமாக அமைந்தன.பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற இந்தியாவின் தொடக்க காலத்தில் எழுத்தறிவு விகிதம் மிகவும் குறைவாக (சுமார் 18%) இருந்ததை இந்தக் கணக்கெடுப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

1951 கணக்கெடுப்பு என்பது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தவிர்த்து இந்தியாவின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது (அங்கு 1961-இல்தான் முதல் கணக்கெடுப்பு நடந்தது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *