மேனாள் ஒன்றிய நிதி துறை இணை அமைச்சரும், திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தின் சகோதரர் வழக்குரைஞர் எஸ். எஸ் ராஜ்குமாரின் மகள் அய்ஸ்வர்யா – பொது உடமை இயக்கத்தின் போராளி தியாகி என். வெங்கடாசலத்தின் பேரனும், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் உயிரி தொழில் நுட்பத் துறை பேராசிரியருமான முனைவர் வெ. சுகுமாரனின் மகன் மருத்துவர்
வெ.சு. வெங்கடேஷ் ஆகியோர் மணவிழாவில் கழகப் பொதுச் செயலாளரும், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான முனைவர் வீ. அன்புராஜ் பங்கேற்று மணமக்களை நேரில் வாழ்த்தி சிறப்பித்தார்கள். பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துக் கடிதம் மணமக்களிடம் வாசித்து அளிக்கப்பட்டது. உடன்: தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மு. அய்யனார், வள்ளிபட்டு தமிழ்செல்வன்.
