
பெத்தநாயக்கன்பாளையம், ஜூன் 9- பெத்தநாயக்கன்பாளையத்தில் தாய்க் கழகமாம் கழக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது
5.6.2026 அன்று மாலை 6 மணியளவில் பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நிகழ்ச்சியை தலைமை யேற்று தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் அ.சுரேஷ், மாவட்டச் செயலாளர் நீ.சேகர் வருகை தந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாவட்டக் காப்பாளர் த.வானவில், நகரத் தலைவர் பக மாநில பொதுச் செயலாளர் வா. தமிழ்பிரபாகரன், பக மாநில அமைப்பாளர் இரா. மாயக்கண்ணன், பக மாவட்ட தலைவர் வ. முருகானந்தம், வெ.அண்ணாதுரை, ஒன்றியச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம் திமுக பேரூர் செயலாளர் பெ.வெங்கடேஷ், பேரூராட்சி நகர்மன்ற தலைவர் பழனியம்மாள் ராஜாமணி, இ.ஆர்.கே.ராமகிருஷ்ணன், சிபிஅய் தாலுக்கா செயலாளர், சிபிஅய் மாவட்ட நிர்வா கக்குழு உறுப்பினர் என் எம் சடையன் ஆகியோர் வருகை தந்து டாக்டர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளை பட்டியல் போட்டு விளக்கி பேசினார்கள்
சிறப்புரையாற்றிய கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா ஆகியோரிடம் கொண்ட நட்பும் அவர்கள் மீது கொண்ட பற்றும் எப்படிப் பட்டது என்று பல வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்து டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் சட்டங்களாலும் திட்டங்களாலும் எந்தந்த வகையில் பயனடைந்தார்கள் என்பதை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் தா. திவாகர் தும்பல் அங்கமுத்து பக மாவட்ட துணைத் தலைவர் ச. வினோத் புத்திரகவுண்டம்பாளையம் கூ. செல்வம் வெண்ணந்தூர் செல்வகுமார் மற்றும் ஏறாளமான ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தார்கள்
நிறைவாக வெ.அண்ணாதுரை அனைவருக்கும் நன்றி கூறி நிறைவு செய்தார்.
