சீன – ரஷ்ய அதிபர்கள் காணொலி மூலம் பேச்சு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

லெனின் கிரேட், பிப். 5– ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பதை சீனா நிறுத்த வேண்டும் என அய்ரோப்பிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், சீனா ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தது. இதனால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்குப் பொருளாதாரத் தடை விதித்தும் எந்தப் பலனும் இல்லை.

தற்போது அய்ரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சீனாவுடன் உறவை மேம்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்து மற்றும் கனடா பிரதமர்கள் கடந்த மாதம் சீனாவுக்குச் சென்றனர். ஜெர்மன் அதிபரும் இந்த மாதம் சீனா செல்லவுள்ளார்.

இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், ரஷ்ய அதிபர் புதினும் நேற்று (4.2.2026) காணொலி அழைப்பில் பேசினர். ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் தொடர்பாக சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக இவர்கள் பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ரஷ்யப் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் செர்ஜி ஷோய்கு (Sergei Shoigu), கடந்த வாரம் பெய்ஜிங் சென்று சீன வெளியுறவுத்துறை அதிகாரி வாங் யீயைச் சந்தித்தார். உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் நிலையில், இரு நாடுகளும் நெருங்கிய உறவைப் பராமரிக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *