புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா

1 Min Read

புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழாவும், தமிழ்ப் புத்தாண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது 16.01.2026 காலை 10.30 மணியளவில் புதுச்சேரி, புதிய பேருந்து நிலைய நுழைவு வாயிலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட கழகத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில் காப்பாளர் இரா. சடகோபன் மாலை அணிவித்தார். கழகக் காப்பாளர் இர.இராசு வாழ்த்தொலி முழக்கம் செய்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மு.குப்புசாமி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், பொதுக்குழு உறுப்பினர் விலாசினி ராசு , எழுத்தாளர்கள் அரிமா பாண்டியன், புதுவைத் தமிழ் நெஞ்சன், த.வீராசாமி, இரா.திருநாவுக்கரசு, களஞ்சியம் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும் ஆளுக்கு ஒரு குறள் கூறி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *