13.2.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* திருத்தப்பட்ட புதிய வருமான வரி சட்டத்தை நாடாளுமன்றத்தில் மோடி அரசு அறிமுகப்படுத்துகிறது.
* கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி ஆகியவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு; மசோதாவை மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்த தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனு தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவு.
* சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கடாச்சாரி லட்சுமி நாராயணன் மற்றும் நீதிபதி பெரியசாமி வடமலை ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக ஒன்றிய அரசு நியமனம்.
தி இந்து
* கும்பமேளா விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ‘சரியான இறப்பு எண்ணிக்கையை’ உ.பி. அரசு மறைத்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு.
.- குடந்தை கருணா