புதுடில்லி, டிச.12 வரதட்சிணை கொடுமை வழக்குகளில் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்க நீதிமன்றங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 10.12.2024 அன்று அறிவுறுத்தியது.
இத்தகைய வழக்குகளில் கணவ ரின் அப்பாவி குடும்ப உறுப்பினா்கள் சிக்க வைக்கப்படும் போக்கு அதிக ரித்து வருவதை சுட்டிக் காட்டி, நீதிபதிகள் இந்த அறிவுறுத்தலை வழங்கினா்.
தெலங்கானாவில் கணவா் மற்றும் அவரது குடும்பத்தினா் மீது பெண் ஒருவா் தொடா்ந்த வரதட்சிணை வழக்கை ரத்து செய்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, என்.கோடீஸ்வா் சிங் ஆகியோர் அடங் கிய அமா்வு உத்தர விட்டது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
அண்மைக் காலமாக திருமண வழக்கு சார்ந்த தகராறுகள் அதிகரித் துள்ளன. திருமண முரண்பாட்டால் குடும்ப பிரச்சினைகள் எழும்போது கணவரின் குடும்ப உறுப்பினா்கள் அனைவரையும் வழக்கில் சிக்க வைக்கும் போக்கு பெரும்பாலும் காணப்படுகிறது. இது, நீதித் துறை அனுபவங்களின் மூலம் உறுதி செய்யப்பட்ட உண்மையாகும். குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498ஏ பிரிவானது, கணவா் மற்றும் அவரது குடும்பத்தினரை பழிவாங்கும் ஆயுதமாக மாறிவிடக் கூடாது. கணவரின் அப்பாவி குடும்ப உறுப்பினா்களை சிக்க வைக்க சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது, அவா்கள் தேவையின்றி துன்புறுத் தலுக்கு உள்ளாவதைத் தடுக்க நீதிமன்றங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த வழக்கில் (தெலங்கானா நபரின் வழக்கு) சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனா்.