மகாராட்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வித்தியாசம்! முறைகேடுகள் அம்பலம்!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி மறுதேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

மும்பை, நவ. 27- மகாராட்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்கு களுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது.
288 தொகுதிகளைக் கொண்ட மகாராட்டிரா மாநில சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நவம்பர் 23ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டன. இதில், பா.ஜ.க., கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், தேர்தல் முடிவில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக பல இடங்களில் மக்கள் பா.ஜ.க.,வுக்கு வாக்களிக்கவில்லை என வெளிப்படையாக தெரிவித்தனர். ஆனால் அந்த இடங்களில் பா.ஜ.க., வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டங்களில் ஈடு பட்டனர்.

இந்நிலையில், மகாராட்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருப்பது தற் போது தெரியவந்துள்ளது. அதன்படி, தேர்தலின்போது 66 புள்ளி பூஜ்ஜியம் 5 சதவிகிதம் பேர், அதாவது 6 கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 195 பேர் வாக் களித்ததாக தேர்தல் ஆணையம் வெளி யிடப்பட்ட தகவலில் தெரிவிக்கப் பட்டிருந்தது. 3 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரத்து 318 பெண்களும், 3 கோடியே 34 லட்சத்து 34 ஆயிரத்து 57 ஆண்களும், ஆயிரத்து 820 மூன்றாம் பாலினத்தவரும் வாக்களித்திருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது கூடுதலாக 5 லட்சத்து 4 ஆயிரத்து 313 வாக்குகள் எண்ணப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மகாராட்டிரா தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது உறுதியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
வாக்குச்சீட்டை பயன்படுத்தி மறு தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *