ராமேசுவரத்தில் செப்.20-இல் மார்க்சிஸ்ட்ஆர்ப்பாட்டம்!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, செப். 16- தமிழ்நாடு மீனவா்களை மொட்டையடித்து சித்ரவதை செய்த இலங்கை அரசைக் கண்டித்து, ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 20 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அவா் நேற்று (15.9.2024) வெளியிட்ட அறிக்கை:
இலங்கை அரசால் கடந்த ஜூலை மாதத்திலிருந்து நூற்றைம்பது தமிழ்நாட்டு மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், அந்நாட்டின் ரோந்து கப்பல் மோதலில் ஒரு மீனவா் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அண்மையில் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் சேது, அடைக்கலம், கணேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த இலங்கை அரசு 6 மாத சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்தது. இந்நிலையில் அபராதம் செலுத்தாததால் மீனவா்களை மொட்டையடித்து, கைதிகள் பயன்படுத்தும் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைத்துள்ளனா்.

இலங்கை அரசின் நாகரிகமற்ற இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் செப்.20-ஆம் தேதி ராமேசுவரத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும். இந்த ஆா்ப்பாட்டத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த கட்சியினா் பங்கேற்கவுள்ளனா் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *