சென்னை, மே 19- தமிழ்நாடு முதலமைச்சரின் தனிச் செயலாளர் களுக்குப் பல்வேறு அரசுத் துறைகளை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் நிர்வாக வசதிக்காக எந்தெந்த செயலாளர்கள், எந்தெந்த துறைகளைக் கவனிப்பார்கள் என்ற விவரம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன் முழு விவரம் பின்வருமாறு:
செந்தில்குமார் அய்.ஏ.எஸ் (முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர்)
முக்கியத்துவம் வாய்ந்த நிதி மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகள் இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன:
நிதித்துறை மற்றும் பொதுத்துறை உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மின்துறை, தொழில்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் ஊழல் தடுப்பு ஆணையம் மறுவாழ்வுத்துறை
லட்சுமி பிரியா அய்.ஏ.எஸ் (2ஆவது செயலாளர்)
முதலமைச்சர் அலுவலக நிர்வாகம் மற்றும் கல்வி, சமூக நலன் சார்ந்த துறைகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் அலுவலகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகம் அரசியல் சார்பற்ற நேர்முக சந்திப்பு மற்றும் சுற்றுப்பயண ஏற்பாடுகள் அரசு நெறிமுறைகள் (Protocols)
பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை யினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.
அண்ணாதுரை அய்.ஏ.எஸ் (3ஆவது செயலாளர்)
விவசாயம், வளங்கள் மற்றும் மக்கள் பயன்பாட்டுத் துறைகள் இவருக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயற்கை வளத்துறை மற்றும் நீர்வளத்துறை கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கைத்தறி மற்றும் துணிநூல் துறை, போக்குவரத்துத்துறை மனிதவள மேலாண்மைத் துறை, சமூக சீர்திருத்தத்துறை, சட்டத்துறை மற்றும் சட்டப்பேரவைச் செயலகம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
விஷ்ணு அய்.ஏ.எஸ் (முதலமைச்சரின் கூடுதல் செயலாளர்)
தொழில்நுட்பம், இளைஞர் நலன் மற்றும் வணிகம் சார்ந்த துறைகள் இவருக்குக் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை (எம்எஸ்எம்இ) தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டுத்துறை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை நிர்வாக நடைமுறைகளைத் துரிதப்படுத்தவும், மக்கள் நலத்திட்டங்களைக் கண்காணிப்பதைக் கண்காணிப்பை எளிதாக்கவும் இந்தத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
