ஒரு பெருங்கலவரத்திற்கு திட்டமிடும் விசுவஹிந்து பரிஷத் நூஹ் நகரில் மீண்டும் ஊர்வலம்

3 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

காவல்துறையும் மறுப்பு தெரிவிக்காமல் அனுமதி அளித்த கொடுமை

அரசியல்

குர்கான், ஆக. 14- அரியானாவின் நூஹ் மாவட்டத்தில் வன்முறையால் நிறுத்தப்பட்ட விசுவ ஹிந்து பரிஷத் ஊர்வலம், ஆகஸ்ட் 28-ஆம் தேதி மீண்டும் நடத்தப்படும் என்று அந்த மாநிலத்தில் நடைபெற்ற மகா பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு காவல்துறையும் உடனடியாக அனுமதி கொடுத்துள்ளது

அரியானா மாநிலம் நூஹ் மாவட் டத்தில் முசுலிம்கள் பெரும்பான் மையாக உள்ளனர். இந்நிலையில், அந்த மாவட்டத்தில் உள்ள புனித ஹிந்து தலங்கள், அங்குள்ள செல் வாக்கு மிக்க நபர்களால் ஆக் கிரமிக்கப்படும் அச்சுறுத்தல் இருப்பதாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் அங்குள்ள கோவில்கள் இசுலாமியர்களால் தீட்டு ஆகிவிட் டது என்று கூறி அந்த கோவில் களுக்கு தீட்டு கழிக்க மாட்டு மூத் திரம், கங்கை, யமுனை போன்ற ஆறுகளில் தண்ணீர் போன்ற வற்றை கொண்டு வந்து ஊற்றும் பிரஜ்மண்டல் ஜல அபிஷேக (புனித நீரை ஊற்றி செய்யப்படும் அபிஷேகம்) ஊர்வலத்தை விசுவ ஹிந்து பரிஷத் நடத்தி வருகிறது. 

கடந்த ஜூலை 31-ஆம் தேதி அங்கு நடைபெற்ற ஊர்வலம் பெரும் கலவரத்தில் முடிந்தது. அங்குள்ள இசுலாமியர்களின் வழி பாட்டுத்தலங்களின் மீது தாக்குதல் நடத்தியதால் ஹிந்து- முசுலிம்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்துக்கும் பரவியது.

இந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந் தனர். சாலையில் இருந்த நூற்றுக் கணக்கான வாகனங்கள் தீக்கிரை யாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற் பட்டவர்கள் கைது செய்யப்பட்ட னர். இது தொடர்பாக அம்மாநில பாஜக அரசு அங்குள்ள இசுலா மியர்களின் வாழ்விடங்களை புல் டோசர் கொண்டு இடித்து நாசப் படுத்தியது இதனால் 300-க்கும் மேற்பட்ட இசுலாமியர் குடும்பங் கள் நடுத்தெருவிற்கு வந்தனர். 

இந்தச் சூழலில், அந்த மாநிலத் தின் பல்வல் மாவட்டம் போன்ட்ரி கிராமத்தில் ஹிந்து அமைப்புகளின் மகா பஞ்சாயத்து கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வல், குரு கிராம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடர்பாக குரு கிராமைச் சேர்ந்த விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் தேவேந்தர் சிங் கூறுகையில், ‘ வன்முறையால் தடைபட்ட விசுவ ஹிந்து பரிஷத் ஊர்வலத்தை ஆகஸ்ட் 28-இல் மீண்டும் நடத்த முடிவு செய்யப் பட்டது. நூ மாவட்டத்தில் உள்ள நல்ஹர் பகுதியில் தொடங்கி, அந்த மாவட்டத்தில் உள்ள ஃபிரோஸ் பூர் ஜிராகா பகுதியில் உள்ள ஜிரேஷ்வர் கோயில் வழியாக ஊர் வலம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. விசுவ ஹிந்து பரிஷத் நடத்திய ஊர்வலத்தில் நடத்தப்பட்ட தாக் குதல் தொடர்பாக தேசிய புல னாய்வு முகமை (என்அய்ஏ) விசா ரணை நடத்தப்பட வேண்டும். நூ மாவட்டத்தை பசுவதை இல்லாத மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைக்கவும் கூட்டத்தில் முடி வானது’ என்று தெரிவித்தார்.

 காவல்துறை அனுமதி

இதுதொடர்பாக காவல் துறை கூறுகையில், ‘குறைந்த அளவிலான நபர்களுடன் ஊர்வலத்தை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. எவரே னும் வெறுப்புணர்வு பேச்சுகளை பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்து உள்ளது. 

இந்த வன்முறை தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் மனோ கர் லால் கட்டார் கூறும் போது வன்முறையின் போது அனை வருக்கும் பாதுகாப்பு வழங்க காவல்துறையால் முடியாது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் மாநில அரசு இஸ்லாமி யர்கள் குடியிருப்பு வழியாக ஊர் வலத்திற்கு அனுமதி கொடுத்திருப் பது. அரசே வன்முறையை அடக்க முற்படாமல் அதை நடக்கவிட்டு வேடிக்கை பார்க்க முடிவு செய்து போல் உள்ளது. 

மேலும் மீதமிருக்கும் இசு லாமியர்களின் குடும்பங்களையும் மாவட்டத்தைவிட்டு விரட்டி அடிக்கும் திட்டத்தை மறைமுக மாக வன்முறையாளர்களின் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளதோ என்று அம்மாவட்ட மக்கள் கூறு கின்றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *