மூத்த குடிமக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்

viduthalai
2 Min Read

ஒன்றிய அரசுக்கு வங்கி தொழிற்சங்கத் தலைவர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூலை 18- நாட்டு நலனையும், அடித்தட்டு மக்களின் பொரு ளாதார மேம்பாட்டையும் வங்கி ஓய்வூதியர் நிதி சார்ந்த நலனையும் ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை உறுதி செய்ய வேண்டும் என்று வங்கி மேனாள் தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய ஸ்டேட் வங்கியின் மேனாள் தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டமைப்பின் (AFCCOM) தலைவர் எஸ்.பி.இராமன், செயலாளர் எம்.கே.மூர்த்தி ஆகியோர் நேற்று (17.7.2024) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொதுத்துறை வங்கிகள் நாட்டுடைமை யாக்கப்பட்டு 55 ஆண்டுகளை நிறைவு செய்த பின்னரும், நாட்டுடைமையாக் கப்பட்டதற்கான நோக்கங்களை முழு மையாக நிறைவேற்றப்படாதது நாட்டின் வளர்ச்சியில் நாட்டம் கொண்டோரின் மனதில் ஆழமான பாதிப்பை உருவாக்கி உள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகள்

வர்த்தகச் சூதாடிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அளித்த வரம்பற்ற கார்ப்பரேட் வரிச் சலுகையால் ஒன்றிய அரசுக்கு 1,00,241 கோடி வரி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று எழுத்து மூலம் நாடாளுமன்ற மேலவையில் நிதித்துறை இணையமைச்சரின் பதில் நாட்டு மக்களி டையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் 2023 வரை பொதுத் துறை வங்கிகள் வழங்கிய கடனில் 14,56,226 கோடி தள்ளுபடி செய்யப்பட் டிருப்பதாக நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பது நாட்டின் பொரு ளாதார முன்னேற்றத்தை பெருமளவில் பாதிக்கும் என்ற கருத்தை ஒன்றிய அரசு கவனமாக கருத்தில் கொண்டு தகுந்த கொள்கைகளை வடிவமைப்பத்தோடு பாரபட்சமின்றி செயல் படுத்தவும் முன்வர வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை நலி வடையச் செய்த பெருந்தனக்காரர்களுக்கு காட்டப்பட்ட கருணை, நாட்டின் பொரு ளாதார வளர்ச்சிக்கும் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த காலம் கருதாது உழைத்த எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். விண்ணை முட்டும் விலைவாசியை எதிர்கொண்டு ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வாழும் மூத்த குடிமக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்க ஒன்றிய அரசு முன் வரவேண்டும்.

வங்கி ஓய்வூதியர்களுக்கு நீதி வழங்க வேண்டும்

கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியில் பொதுத்துறை வங்கிகள் ஈட்டிய இலாபம் அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களின் படி 30,859 கோடி ரூபாய் ஆகும். கடந்த மார்ச் 2024ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகள் ஈட்டிய இலாபம் 1,41,203 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 1995 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி எட்டு லட்சம் வங்கி ஓய்வூதி யர்களுக்கும் ஓய்வூதிய சீரமைப்பு (PENSION UPDATION) வழங்க முப்பது ஆண்டுகளாக தாமதம் செய்து வரும் இந்திய வங்கிகள் நிர்வா கத்தின் போக்கை தடுத்து நிறுத்தி நீதி வழங்க நிதியமைச்சர் முன்வர வேண்டும்.

‘உழைப்பவரே உயர்ந்தவர்’ என்ற கருத் தோட்டத்தை கவனத்தில் கொண்டு, ‘தாம திக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி’ என்ற சட்ட நடைமுறையை ஆழ்ந்து பரிசீலனை செய்து நாட்டின் நலனையும் வங்கியின் வளர்ச்சியையும் ஒரு சேர உறுதி செய்த எட்டு லட்சம் வங்கி ஓய்வூதியர்களுக்கு நீதி வழங்க நிதி நிலை அறிக்கை மூலம் நிதியமைச்சர் முன்வர வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *