பி.ஜே.பி. ஆளும் குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் மோசடியோ மோசடி!

Viduthalai
4 Min Read

தேர்வறையில் கேள்விக்கான பதிலை அளிக்க ரூ.10 லட்சமாம்!
ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் கைது! லட்சக்கணக்கிலான பணம் பறிமுதல்!!

காந்திநகர், மே 11- நீட் தேர்வு வேண்டாம் என்று சட்ட மசோதாவுக்கான தீர்மானங் களை சட்ட மன்றத்தில் நிறைவேற்றி அனுப் பினாலும் குடியரசுத் தலைவரின் ஒப்பு தலைப் பெற்றுத்தராமல் மாநில உரிமைகளை காலில் போட்டு மிதிக்கின்ற ஒன்றிய பாஜக அரசின் அதிகார ஆணவப்போக்கால் மருத் துவக்கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவை சிதைத்துவருகின்ற கட்டாய நீட் தேர்வால் மாணவச்செல்வங்கள் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

மாநிலத்துக்கு மாநிலம் கல்வித் திட்டம் மாறியுள்ள நிலையில், மருத்துவக் கல்விக் கான நுழைவுத் தேர்வில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்படிதான் கேள்வி என்றால், எப்படி அனைவருக்கும் பொதுவானதாக இருக்க முடியும்? என்கிற கேள்வி கல்வி யாளர்களால் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
அப்படி கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வின் பெயரால் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளன.
மோசடிகள் வெளியாவதைப்போலவே, மாணவச் செல்வங்களின் உயிரிழப்புகளும் தொடரும் அவல நிலை நீட் தேர்வால் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இள நிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET – National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு கடந்த 5.5.2024 அன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெற்றது.
தமிழ்நாட்டில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உள்பட நாடு முழுவதும் 24 லட் சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர்.
அந்த வகையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. வரும் ஜூன்14 ஆம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாகிறது. முறை கேடுகளைத் தடுக்க நீட் தேர்வில் மாணவர் களுக்கு கடுமையான பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இத்தகைய சூழலில்தான் மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ராஜஸ் தானில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம் பலமாகி இருந்தது. நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை ஆனதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் என நாடு முழு வதும் 50 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, பீகார் மாநிலத்தில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் வினாத் தாள் கசிவு தொடர்பாகவும் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 14 பேர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக தேர்வு அறையிலேயே பீகார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாட்னாவில் சில விடுதிகளில் தேர்வுக்கு முந்தைய நாளே வினாத்தாள் தொடர்பாக அவர்களை படிக்க வைப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும், ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவதற்காக ஒவ்வொரு தேர்வர்களிடம் இருந்து தலா ரூ.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர் என்ற பகீர் தகவலும் வெளியானது. இதனையடுத்து பீகார் காவல்துறையினர் பல்வேறு விடுதி களில் சோதனை நடத்தி மோசடியில் ஈடு பட்ட நபர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நீட் தேர்வு முறைகேடு விவகாரத் தில் ராகுல் காந்தி உள்பட எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறை கேடு நடந்துள்ளதாக பகீர் தகவல், விசா ரணையில் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பன்ச் மகால் மாவட்டம் கோத்ரா பகுதியில் உள்ள தேர்வு மய்யத்தில் நீட் தேர்வு நடந்துள்ளது. இந்தத் தேர்வு மய் யத்தில் துஷார் பட், தேர்வு மய்ய துணை கண்காணிப்பாளராக பணியில் இருந்தார். அப்போது அங்கிருந்த மாணவர்களிடம், நீட் தேர்வு முடிந்த பிறகு, தேர்வுத்தாள்களில் பதில் எழுதி அனுப்புவதாகக் கூறி ரூ.10 லட்சம் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அங்கிருந்த 6 மாணவர்களும் ஒப்புக் கொண்டதாகவும், அதில் ஒரு மாணவர் முன்பணமாக ரூ.7 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் குறித்து கோத்ரா தாலுகா காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய் யப்பட்டது. அதன் பேரில், துஷார் பட் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆரீப் வோரா என்ற மாணவர் சார்பில் ரூ.7 லட்சத்தை துஷார் பட்டிடம் வழங்கியது உறுதி செய் யப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *