அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் ஆணை

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசியல்

சென்னை, செப். 11- அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண் டும். இதற்கான நடவடிக்கைகளை வரும் 30ஆ-ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று தலை மைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர்  எழுதியுள்ள கடிதத்தில் கூறி யிருப்பதாவது:

அசுத்தமான நீரை அருந்திய பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட் டனர். ஒருவர் உயிரிழக்கவும் நேரிட்டது. கடந்த ஆண்டு ஜல் ஜீவன்திட்டத்தின்கீழ் 60 சதவீத வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு குழாய்களை அமைத்து, நாட்டி லேயே தமிழ்நாடு சிறப்பாக செயல் பட்டதுஎன ஒன்றிய அரசு அங்கீ கரித்துள்ளது. அத்தகைய நம் மாநி லத்தில், மாசுபாடான நீரை அருந் தியதால் மக்கள் பாதிக்கப்படுவது குறித்தசெய்திகள் வருவது வருந்தத் தக்கது.

இதுபோன்ற சம்பவங்கள் நடக் காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவருக்கும் பாது காப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வும், தொடர்ந்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

சேதமடைந்த, நீர்க்கசிவு உள்ள குழாய்களை அடையாளம் கண்டு சரிசெய்ய வேண்டும். மேல்நிலை தொட்டிகள், நீர்த்தேக்கங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். குடிநீர் குழாய்கள், தொட்டிகள், தரைமட்ட நீர்த்தேக் கங்களில் நீர்மாசுபாடு அடைவதற் கான காரணங்களை கண்டறிந்து, அதை சரிசெய்யவேண்டும். நீர் மாசுபாடு தொடர்பான அபாயங் களை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேல்நிலை தொட்டிகள், தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளில் தேக்கப்பட்டுள்ள நீரில் தேவை யான அளவில் பிளீச்சிங் பவுடர் கலந்து, நீரை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீரை சுத்தப் படுத்த போதுமான அளவுக்கு நீரில் குளோரின் பொடி கலப்பதை உறுதிப்படுத்த வேண்டும். குடிக்க விநியோகிக்கும் நீரில் கிருமிகள் கலக்காத வகையில் நீரை பாது காப்பாக வைக்க வேண்டும்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகளுடன் ஒருங்கிணைந்து அதிக அளவில் நீர் மாதிரிகளை சேகரித்து, நீரின் தரத்தை பரிசோதிக்க வேண்டும். 

குடிநீரின் தரம் தொடர்பான பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்க்கும்வகையில் வலுவான குறை தீர்வு அமைப்பை நிறுவ வேண்டும். ‘குடிநீர் பிரச்சினை குறித்து புகார் கொடுத்தால் சரியான நேரத்தில் தீர்க்கப்படும்’ என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படுவதை உறுதிப் படுத்த வேண்டும்.

இவை அனைத்தையும் வரும் 30ஆ-ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். இதுதொடர்பான முன்னேற்றத்தையும், ஆக்கப்பூர்வ மான விளைவுகளையும் கண் காணிக்க ஏதுவாக,நகராட்சி நிர் வாகம், குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலர்க ளுக்கு விரிவான அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *