புதுடில்லி,மார்ச் 31- காங்கிரஸ் கட்சி எம்.பி. யான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
இன்றும் மூன்றில் ஒரு பெண் மட்டுமே ஏன் வேலை செய்கிறார்? 10 அரசு வேலைகளில் ஒரு பெண் மட்டும் ஏன்?
இந்திய மக்கள் தொகையில் பெண்களின் எண் ணிக்கை 50 சதவீதம் இல்லையா?
மேல்நிலை மற்றும் உயர்கல்வியில் பெண்களின் பங்கு 50 சதவீதம் இல்லையா? அவர்களின் பங்கு ஏன் குறைவாக உள்ளது?
மக்கள் தொகையில் பாதியாக இருப்பவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது.
பெண்களுக்கு சமமான பங்களிப்பு இருந்தால் மட்டுமே பெண்களின் திறன் முழுமையாகப் பயன்படுத் தப்படும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
அனைத்து புதிய அரசுப் பணிகளிலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண் களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான எதிர்காலம், உறுதித்தன்மை மற்றும் சுயமரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் சக்தியாக மாறுவார்கள்.
50 சதவீத அரசுப் பதவிகளில் பெண்களைக் கொண்டிருப்பது நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தைத் தரும். பெண்கள் இந்தியாவின் தலைவிதியை மாற்றுவார்கள் என தெரிவித்துள்ளார்.